இலங்கை
மாரவில துப்பாக்கிச் சூட்டில் பெண் உயிரிழப்பு!

மாரவில, மரந்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தத் துப்பாக்கிச் சூடு நேற்றிரவு (22) இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண், அவரது வீட்டின் முன் நின்று கொண்டிருந்த போது இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, அவரின் அருகில் இருந்த 10 வயது சிறுவனும் காயமடைந்துள்ளான்.
சம்பவத்தில் உயிரிழந்த பெண் மாரவில பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அதேநேரம், காயமடைந்த சிறுவன் சிகிச்சைக்காக மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாரவில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
![]()