உலகின் மிகவும் வறண்ட அட்டகாமா பாலைவனத்தில் பனிப்பொழிவு

உலகின் மிகவும் வறண்ட பாலைவனங்களில் ஒன்றாக திகழும் வடக்கு சிலியில் உள்ள அட்டகாமா பாலைவனத்தில் வியாழக்கிழமை பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
அட்டகாமா பாலைவனம் சுமார் 1,000 கிலோமீட்டர் நீளத்தில் தென் அமெரிக்காவின் மேற்கில், பசிபிக் கடற்கரையோர பகுதியில் அமைந்துள்ளது. இதனை உலகிலேயே மிகவும் வறண்ட பாலைவனம் என்று, நாசா மற்றும் தேசிய புவியியல் கழகம் ஆகிய அமைப்புகள் அறிவித்துள்ளன .

நம்பமுடியாத நிகழ்வு
அதேவேளை கடந்த 10 ஆண்டுகளில் இது போன்ற நிகழ்வு ஏற்பட்டதில்லை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அட்டகாமா பாலைவனம் தற்போது வெண்ணிற போர்வை போர்த்தியது போல பனி படர்ந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த பனிப்பொழிவு காலநிலை மாற்றத்தின் மற்றொரு வினோதமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

எனினு ம் இந்த வகையான நிகழ்வு, அட்டகாமா பாலைவனத்தில் மழைப்பொழிவு அடிக்கடி நிகழும்” எனபதை காலநிலை மாதிரியாக்கம் காட்டுகிறது என சாண்டியாகோ பல்கலைக்கழக காலநிலை ஆய்வாளர் ரவுல் கோர்டெரோ ஏஎப்பியிடம் தெரிவித்துள்ளார்.
உலகின் இருண்ட வானங்களுக்கு தாயகமான அட்டகாமா
உலகின் இருண்ட வானங்களுக்கு தாயகமான அட்டகாமா, பல தசாப்தங்களாக உலகின் மிகவும் மேம்பட்ட தொலைநோக்கிகளுக்கு ஏற்ற இடமாக இருந்து வருகிறது.
அட்டகாமா பாலைவனம், அதன் வறண்ட நிலப்பரப்பு, உப்பு ஏரிகள், மற்றும் எரிமலைப் படிமங்களுக்காகப் புகழ்பெற்றது. விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கூட, செவ்வாய் கிரகத்தில் உள்ள நிலப்பரப்புக்கு ஒப்பான பகுதியாக அட்டகாமா பாலைவனத்தைக் கருதுகிறது.
இவ்வளவு வறண்ட ஒரு பகுதியில் பனிப்பொழிவு நிகழ்ந்திருப்பது, காலநிலை மாற்றத்தின் மற்றொரு வினோதமான விளைவாகப் பார்க்கப்படுகிறது.
இந்த அரிய நிகழ்வுக்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்தபோது, பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட அசாதாரண வானிலை மாற்றங்களே இந்த பனிப்பொழிவுக்குக் காரணமாக இருக்கலாம் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
![]()