பலதும் பத்தும்

மெய்சிலிர்க்க வைக்கும் பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய பொங்கல் விழா!

வவுனியா – பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் பெருவிழா, ஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ இன்று (28) வெகுவிமர்சையாக இடம்பெற்றுள்ளது.

ஆலயத்தின் பொங்கல் விழா முதலில் வீதியுலாவுடன் ஆரம்பமாகியது. பக்தர்களின் காவடி, பால்குடம் நேர்த்திகளுடன் ஊர்வலமாக ஆலயத்தை வந்தடைந்தனர்.

அத்துடன் மயில் நடனம், குதிரையாட்டம், யானை ஊர்வலம், கெண்டமேளம், கதகளி நடனம் என பாரம்பரிய நிகழ்வுகளுடன் மெய்சிலிர்க்க வைக்கும் விழாவாக குறித்த ஆலயத்தின் பொங்கல் விழா இடம்பெற்றது.

என்றுமில்லாத அளவில் இம்முறை பறவைக்காவடி, தூக்குக் காவடி, இன்னும் வேறு காவடிகள் என்றவாறாக பெரியோர் முதல் சிறியோர் வரை தமது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் புடைசூழ பாரம்பரிய நிகழ்வுகளுடன் இடம்பெற்ற ஆலயத்தின் பொங்கல் விழா பக்திப் பரவசத்துடன் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும் விழாவாக இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை- பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலயத்தின் பொங்கல் விழாவை முன்னிட்டு  இசைநிகழ்ச்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button