பலதும் பத்தும்

ரீல்ஸ்மோகம்,கண்டித்த காதலன் – உயிரை மாய்த்த மாணவி!

கர்நாடக மாநிலம் துமகூருவைச் சேர்ந்த 22 வயதான கல்லூரி மாணவி சைதன்யா, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ பதிவிடுவதற்கு காதலன் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில்,

காதலனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாயுடன் வாழ்ந்து வந்த சைதன்யா, அழகு கலை நிபுணராகவும் செயல்பட்டு வந்தார். சமூக வலைதளங்களில் சிறந்த ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார்

ஆனால், இதற்கு காதலர் விஜய் எதிர்பாடுகளைத் தெரிவித்துவந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் இருவருக்குமிடையில் வாக்குவாதம் அதிகரித்தது. இந்நிலையில் சைதன்யா தவறான முடிவெடுத்து வீட்டில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவத்தன்று ஒரு புகைப்படக்காரர் எடுத்த புதிய புகைப்படங்கள், வீடியோக்களை சைதன்யா தனது இன்ஸ்டாகிராம், ஸ்டேட்டஸ்களில் பகிர்ந்திருந்தார்.

இதுவே இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதத்திற்கு காரணமானதாக கூறப்படுகிறது.

இந்த துயர சம்பவம், சமூக ஊடகங்களின் தாக்கம் குறித்து பலரிடமும் கேள்விகளை எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button