பலதும் பத்தும்

இரகசிய நடவடிக்கைகளுக்கு கொசு அளவிலான ட்ரோனை உருவாக்கிய சீனா

போர் களங்களில் மனிதர்கள் நேருக்கு நேர் மோதுவதை விட, ட்ரோன்களே சண்டையிடுகின்றன.

சமீபத்தில் நடைபெற்ற இந்திய மற்றும் பாகிஸ்தான் மோதலிலும், தற்போது நடைபெற்று வரும் ரஷ்யா-உக்ரைன், இஸ்ரேல்-ஈரான் போர்களிலும் ட்ரோன்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

எதிரி நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்புகள் ரேடார் தொழில்நுட்பம் மூலம், இந்த ட்ரோன்களை கண்டறிந்து இடைமறித்து அழித்து வருகிறது.

கொசு அளவு ட்ரோன்

இந்நிலையில், ரேடார் மட்டுமல்ல மனிதர்களின் கண்களிலே எளிதாக சிக்காத வகையிலான கொசு அளவிலான ட்ரோனை சீனா உருவாக்கியுள்ளது.

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (NUDT) ஆராய்ச்சியாளர்கள் இதனை உருவாக்கியுள்ளனர்.

 

இரு விரல்களுக்கு நடுவே உள்ள இந்த ட்ரோன், குச்சி வடிவிலான உடலமைப்பையும், இருபுறமும் இலை போன்ற இறக்கைகள் உள்ளது. 

 

 

 

இதன் சிறிய வடிவம் காரணமாக சென்சார்கள், மின் சாதனங்கள், கட்டுப்பாட்டு சுற்றுகள் ஆகியவரை இதில் பொருத்துவது சவாலாக இருந்துள்ளது.

இந்த கண்களுக்கு சிக்காத ட்ரோன், போர்களம் மற்றும் பிற இடங்களில் உளவு வேலை போன்ற இரகசிய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button