பிரித்தானியாவுக்கு வரும் சார்க்கோ இயந்திரம்: சில முக்கிய தகவல்கள்

பயங்கர நோய்களால் பாதிக்கப்பட்டு கடுமையாக அவதியுற்றுவரும் வயதானவர்கள், மருத்துவர்கள் உதவியுடன் தங்கள் உயிரை தாங்களே மாய்த்துக்கொள்வது தொடர்பான மசோதா நேற்று பிரித்தானியா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், எளிமையாக உயிரை மாய்த்துக்கொள்ள உதவும் இயந்திரம் என அழைக்கப்படும் சார்க்கோ (Sarco) என்னும் இயந்திரத்தை பிரித்தானியாவுக்குக் கொண்டுவர, அந்த இயந்திரத்தை உருவாக்கியவரான Dr பிலிப் (Dr Philip Nitschke) திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சர்ச்சை இயந்திரம்
விடயம் என்னவென்றால், சார்க்கோ இயந்திரம் முதன்முறை சுவிட்சர்லாந்தில் பயன்படுத்தப்பட்ட நிலையில், பெரும் சர்ச்சை உருவானது.
பயங்கர நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டிருந்த 64 வயதுப் பெண்ணொருவர் சார்க்கோ இயந்திரம் மூலம் தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.

ஆனால், அந்தப் பெண் இறந்தபிறகு, அவார்து கழுத்தில் காயங்கள் இருந்ததால், அவருடன் இருந்த Dr ஃப்ளோரியன் அவரைக் கழுத்தை நெறித்துக் கொன்றிருக்கலாம் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட, அவர் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் நிரபராதி என விடுவிக்கப்பட்டாலும், கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டதால் மனமுடைந்துபோயிருந்த அவர், தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டார்.
ஆக, இப்படி கடும் சர்ச்சைகளை உருவாக்கிய அந்த சார்க்கோ இயந்திரத்தைத்தான் பிரித்தானியாவுக்குக் கொண்டுவர Dr பிலிப் திட்டமிட்டுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
![]()