நாமலின் முன்னைய சகாவே சாணக்கியன்

நாமல் ராஜபக்சவுடன் நீலப் படையணியுடன் இணைந்து செயல்பட்ட சாணக்கியன் எம்.பி. பல்வேறு ஊழல் மோசடிகளுக்கும் துணை போனவர் என வெளி விவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா குற்றம்சாட்டினார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற விளையாட்டில் ஊக்கப் பதார்த்த பயன்பாட்டிற்கு எதிரான சமவாயச்சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் சாணக்கியன் எம்.பி.உரையாற்றும் போது குறுக்கிட்டு பேசுகையிலேயே இவ்வாறு குற்றம்சாட்டிய
அவர் மேலும் பேசுகையில்,
சில முறைகேடுகள் தொடர்பில் சாணக்கியன் எம். பி சபையில் கருத்துக்களை தெரிவித்தார். ஆனால் அந்த சம்பவங்கள் இடம்பெறும் காலங்களில் அவர் நாமல் ராஜபக்சவுடனேயே இருந்தார்.நாமல் ராபக்ஸவின் நீலப் படையணியுடன் அவர் இருந்தார்.அந்த வகையில் அக்காலத்தில் இடம்பெற்ற அனைத்து ஊழல் மோசடிகளுக்கும் இவர் துணை போயிருந்தார்.அவ்வாறு இருந்தவர் தற்போது எமது அரசாங்கம் தொடர்பில் குற்றச்சாட்டுகளை முன் வைப்பது பொருத்தமற்றது என்றார்.
இதற்கு பதிலளித்த சாணக்கியன் எம்.பி . நான் சபையில் உரையாற்றியபோது எந்த வொரு முறைகேடுகள் தொடர்பிலும் எதனையும் குறிப்பிடவில்லை. கிழக்கு மாகாணத்தில் விளையாட்டுத் துறையில் ஏற்பட வேண்டிய முன்னேற்றம் தொடர்பிலேயே கருத்துக்களை முன் வைத்தேன் என்றார்.
![]()