உலகம்

தன்னைத் தற்காத்துக் கொள்ள ஈரானுக்கு உரிமை உண்டு – ரஷியா

இஸ்ரேல் – ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ரஷியா ஈரானுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளது.

ஈரானுக்கு தன்னைத் தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு என்றும், இஸ்ரேல் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ரஷிய துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் வலியுறுத்தியுள்ளார்.

“இஸ்ரேல் நிதானத்தையும் பொது அறிவையும் காட்ட வேண்டும். அணுசக்தி உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களின் ஆபத்தான விளைவுகள் அனைவருக்கும் தெரியும்” என்றும் அவர் எச்சரித்தார்.

இதற்கிடையே ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, ஈரான் அதிபர் மசூத் பெஸ்கோவ் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஆகியோருடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.

மோதலைத் தணிக்க உதவுவதாகவும், அமைதிப் பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாகவும் புதின் உறுதியளித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *