பயணப்பொதியைக் குறைக்குமாறு கூறிய அதிகாரிகள்: கதறி அழுத பயணி!

இதனால் அப் பெண் பயணியிடம், `கூடுதல் எடைக்கு பணம் செலுத்துகிறீர்களா அல்லது எடையை குறைக்கிறீர்களா என வினவியுள்ளனர். இதனைக் கேட்டவுடன் அதிர்ச்சியடைந்த அப் பயணி அங்கேயே தரையில் படுத்து அழத் தொடங்கியுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத விமான நிலைய அதிகாரிகள் அவரை சமாதானப்படுத்த முயன்றும் அவர் சமாதானம் ஆகவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில ஆண்டுகளாகவே விமான நிலையங்களில் அதிகாரிகளுக்கும் பயணிகளுக்கும் சலசலப்புகள் அதிகரித்து வருகிறது.
பாதுகாப்பு காரணமாக விமான நிலைய அதிகாரிகள் அவ்வப்போது விதிகளை மாற்றி வருகின்றனர். எனினும் இதனை பயணிகளுக்கு சரியான முறையில் அதிகாரிகள் தெரிவிப்பது இல்லை என பயணிகள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.
கடந்தாண்டு சிக்காகோவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தை தவறவிட்ட பயணி கோபமடைந்து அங்கிருந்த கணினியை எடுத்து விமான நிலைய அதிகாரி மீது வீசிய வீடியோவொன்றும் இணையத்தில் வைரலாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
![]()