பலதும் பத்தும்

மகளுக்கு 100 பூனைக்குட்டிகளை, வரதட்சணையாக வழங்கிய பெற்றோர்

திருமணத்தின் போது பணம், தங்கம், நிலம் என வரதட்சணை வழங்குவது வழக்கமாக காணப்படுகின்றது

ஆனால், வியட்நாமைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவருக்கு, அவரது பெற்றோர் இவற்றோடு சேர்த்து 100  சிவேட் பூனைக்குட்டிகளையும் வரதட்சணையாக வழங்கிய சம்பவம் பலரையும்  வியக்கவைத்துள்ளது

அதாவது இந்தப் பூனைக்குட்டிகளின் மதிப்பு  ரூபா 50 லட்சத்திற்கும் மேல் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பூனைக்குட்டிகள், உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த லுவாக் காபி கொட்டைகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.

பூனைகளுக்கு காபி விதைகள் உணவாக வழங்கப்பட்டு அவை முழுமையாக ஜீரணிக்கப்படாமல் கழிவு வழியாக வெளியேற்றப்படும் கொட்டைகள் சேகரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன.

இந்த காபி கொட்டை தொழிலை தங்கள் மகள் தொடங்க உதவுவதற்காகவே இந்தப் பூனைகளை வரதட்சணையாக அளித்ததாகப் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button