Superbug கிருமிகளை ஒழிக்க மனித மலத்தை பயன்படுத்தும் சோதனை முயற்சி

சமீப காலமாக, மனித உடலில் காணப்படும் Superbugs எனப்படும் கிருமிகள் குறித்த அதிக அளவில் செய்திகள் வெளியாகிவருகின்றன.
மனித உடலுக்குள் நுழையும் நோய்க்கிருமிகள் நோயை உண்டாக்கும்போது, அவற்றைக் கொல்வதற்காக, அதாவது, அந்த நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆன்டிபயாட்டிக்குகள் என்னும் மருந்துகளை மருத்துவர்கள் கொடுப்பார்கள்.
ஆனால், ஆன்டிபயாட்டிக் சிகிச்சையையும் மீறி உயிர் வாழும், அதாவது ஆன்டிபயாட்டிக்குகளால் கொல்லப்படாத சில வகை கிருமிகள் உள்ளன. அவைதான் Superbugs என அழைக்கப்படுகின்றன.
ஆக, ஆன்டிபயாட்டிக்குகளால் கொல்லப்படாத இந்த Superbugs என்னும் கிருமிகள் ஒருவரை தாக்கும்போது, அவருக்கு எந்த ஆன்டிபயாட்டிக்குகளைக் கொண்டும் சிகிச்சை அளிக்க முடியாது.
ஆகவே, இந்த கிருமிகளால் பாதிக்கப்படும் நோயாளிகள் மரணம் வரை செல்லும் நிலை ஏற்படுவதால், இப்படிப்பட்ட Superbugs என்னும் கிருமிகள் சமீப காலமாக அதிக அளவில் கவனம் ஈர்த்துவருகின்றன.
இந்நிலையில், மற்றொரு விடயம் சமீப காலமாக கவனம் ஈர்த்துவருகிறது. அதாவது, இந்த Superbugs என்னும் கிருமிகளை உடலிலிருந்து ஒழித்துக்கட்ட, அல்லது வெளியேற்ற மனித மலத்தை பயன்படுத்தும் வழிமுறை ஒன்று சோதனை முறையில் பரிசோதிக்கப்பட்டுவருகிறது.
அதாவது, ஆரோக்கியமான மனிதர்களிடமிருந்து சேகரிக்கப்படும் மலத்தை உறையவைத்தல் மூலம் உலரவைத்து, அதை கேப்சூல்களில் அடைத்து, இந்த Superbugs என்னும் கிருமிகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தும் ஒரு வழிமுறை ஒன்று சோதனை முறையில் பரிசோதிக்கப்பட்டுவருகிறது.
அதாவது, கேப்சூல் மூலம் உடலுக்குள் செலுத்தப்படும் நல்ல கிருமிகள், உடலுக்குள் இருக்கும் Superbugs என்னும் கிருமிகளை உடலிலிருந்து மலம் மூலம் வெளியே தள்ளிவிடும் என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
லண்டனிலுள்ள Guy’s and St Thomas’ மருத்துவமனைகளில் 41 நோயாளிகளும் இந்த சோதனை முறை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
![]()