இலங்கை

வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல்; படையெடுக்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்!

வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இன்றையதினம் இடம்பெற்றுவருகின்றது.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை, பாற்செம்பு, பரவ காவடி,  தீச்சட்டி பாதயாத்திரை என பல்வேறு வகையான நேர்த்தி கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.

இந்நிலையில்  பொலிசார், இராணுவத்தினர் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினர் ஆலயத்துக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்புக்காக கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட சுகாதாரத் தினைக்களத்தினர்  சுகாதார நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *