“இன்னும் கன்னியாக” ….. கவிதாயினி மாஜிதா தவ்பீக் ….. மருதமுனை.

இன்னும் கன்னியாக
சிறுகதைக் கோவை குறித்து
கவிதாயினி மாஜிதா தவ்பீக்
மருதமுனை.![]()
பாடும்மீன் ஸ்ரீகந்தராசாவின் இன்னும்
கன்னியாக என்ற சிறு கதைத் தொகுப்பினை முழுமையாக வாசிக்கக்
கிடைத்தது… !
நூற்றுக் கணக்கான சிறுகதைப் பிரதிகள் வெளிவந்து நம்மை ஆக்கிரமிப்புச் செய்தாலும் அவற்றில் ஒன்றிரெண்டு தொகுதிகள் எமது கவனத்தைப் பெற்று நம்மோடு வாழுகின்றன. ஶ்ரீகந்தராசாவின் இத்தொகுதிக் கதைகள் இனி நம்மோடு தான்.
ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வகைத்து. அவை நம் அருகில் வருவதும் ஒவ்வொரு விழிப்பினைத் தருவதும் நூலின் சிறப்பு
நெஞ்சைத் தொட்ட கதைகள் பல. வயது வந்தும் திருமணம் செய்து கொள்ள வசதியற்று வாழும் முதிர்கன்னிகள் பற்றிய வழமையான கதை என்று நினைத்து இன்னும் கன்னியாக என்ற தலைமைக் கதையை வாசித்தபோது அது வேறொரு கதை. தாம்பத்தியத்துக்குத் தகுதியில்லாத ஒருவனைத் திருமணம் செய்த கதை. அக்கதை வேறொரு திக்கு நோக்கி நம்மை அழைத்துச் செல்கிறது. புதிய கதையனுபவம் .
காணாமல் போனவள், எனக்காகவா நான். முதல் உறவு. ஒப்பீடு, திசை தெரியாத பயணம். மறு வாழ்வா?
ஆகிய ஆறு கதைகளும் படிப்பினை தருவன. அவை காலத்திற்குப் பொருத்தமான கதைகளாக மிளிர்வது
நம் பார்வைக்கு வசந்தம்.
இலங்கை நாட்டில் பயங்கரவாதச் சூழலில் எழுதப்பட்ட பல.கதைகள் யதார்த்தமான கதைகள்.உண்மையில்
கதாசிரியருக்கு ஒரு சபாஷ்…
அவுஸ்திரேலியாவில்
புலம் பெயர்ந்து அங்கேயே குடியுரிமை பெற்று வாழ்ந்து வரும் பெடியன்கள் அனைவருமே இப்படித்தானா….
அங்குள்ள கலாசாரம்
இதுதானா….. அங்குள்ள வாழ்க்கை இப்படித்தானா…..
என்றெல்லாம் மனதைப் பதை பதைக்க வைக்கிறது…..
கதையாக இருந்தாலும்
நிஜமாகத் தெரிகிறது…. அவுஸ்திரேலிய மாப்பிள்ளைமாருக்கு
பிள்ளைகளை கலியாணம் கட்டிக் கொடுத்துவிட்டு காலுக்கு மேலே காலைப் போட்டு கற்பனை வானில் நீந்த முடியாது…எப்பொழுது தலையில்
இடி விழுமென்று தெரியாது.
கண்ணீரில் கதை எழுதும்
எதிர்பார்ப்போடு இருக்க வேண்டுமென்று இத்தொகுதியின் சில கதைகள் பேசுகின்றது.
கதாசிரியருக்கு கற்பனை வளம் கொள்ளைதான்……
கனவுகளைச் சுமந்து கற்பனை வானில் பறந்து எண்ணங்களை இறக்கி வைக்க எதிர் பார்த்தவேளை ஏமாற்றங்களை எதிர்கொள்வதாகச் சில கதைகள். அது வேதனையின் உச்சமே…
இத்தொகுதிக் கதைகள்![]()
சமுதாயத்தில் சிறந்த முன்மாதிரியையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் என்பது எனது கருத்து..
நான் வரமாட்டேன்
என்ற சரசா சங்கரன்
கதையைப் படித்தேன்…
இது போன்ற எத்தனை
சங்கரனை எம் சமூகத்தில் காண்கிறோம்..
சங்கரனை கதாசிரியர்
லேகிய விளம்பரத்தில்
காணப்படும் மனித
தோற்றத்தைக் காட்டும்
எழுத்து வரிகளும் தேக்குமர
உடல் கட்டு என்ற உவமையும் கதைக்கு மேலும் ரசனையூட்டுகிறது..
சங்கரன் போன்றோர்க்கு வாழ்க்கைப் படும் சரசாக்கள் வாழ்வு
கண்ணீர் மழைதான்…
கடைசியில் அவன்
வார்த்தையை உறுதி கொண்டு சாதித்தான். குடிகாரன் உள்ளத்திலும் கௌரவமுண்டு என்பதை கதை கூறியது…
பெற்ற மனம் என்ற கதை
போர் சூழலில் அதுவும் .வட பகுதியில் மக்கள் பட்ட கஸ்டங்களையும் துன்ப துயரங்களையும் வேதனைகளையும்
சோதனைகளையும்
அப்படியே அப்பட்டமாய்
விளக்கியுள்ளது….
அதன் மூலம் இலங்கையில் நடந்த பயங்கரவாத போர் சூழலில் எப்படி மக்களின் வாழ்க்கை இருந்தது என்பதை புதிய தலைமுறையினர் புரியும்படியும் அறியும்படியும் காட்டியுள்ளார் கதாசிரியர்.
போர் முடிந்து சமாதானச் சூழ்நிலையில் மக்கள் வாழ்ந்தாலும் போர் சூழலின் போது மக்களின் மனங்களில் ஏற்பட்ட காயங்கள் ஆறாத வடுக்களாகவே
ஆழமாய் பதிந்துள்ளது என்பதையும் அதே கதைகள் உணர்த்துகின்றன….
காணாமல் போனவர்கள்
என்ற கதை யாழ் மண்ணின் வாசனை. அது மூக்கைத் துளைத்து மகிழ்வு தந்தது.
மொத்தத்தில் பத்துக் கதைகள் அவை ஸ்ரீகந்தராசாவின் முத்துக் கதைகள். தமிழ்ச் சிறுகதை உலகுக்கு சத்துக் கதைகள்
இன்னும் பல தொகுதிகளை
அவரிடமிருந்து, நாம் எதிர்
பார்க்கின்றோம்.
கதாசிரியருக்கு
என் மனம் நிறைந்த பாராட்டுகள்
![]()