பலதும் பத்தும்

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் பல இலட்சம் ரூபா பெறுமதியான கிளி கொள்ளை

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் கூண்டில் வைக்கப்பட்டிருந்த 500,000 ரூபாவுக்கும் மேற்பட்ட மதிப்புடைய நீலம் மற்றும் மஞ்சள் நிற மக்கா கிளி ஒன்று திருடப்பட்டுள்ளது.

இந்த கொள்ளை சம்பவம் கடந்த 04 ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது.

கொள்ளை சம்பவம் மிருகக்காட்சிசாலைக்கு அருகிலுள்ள கடையொன்றில் பொருத்தப்பட்டிருந்த CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்தக் கிளி வைக்கப்பட்டிருந்த கூண்டில் மேலும் 30 கிளிகள் வைக்கப்பட்டிருந்ததாகவும், அவற்றில் ஒன்று இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் நிர்வாகம், பாதுகாப்பு அதிகாரி ஒருவர் மூலம் தெஹிவளை பொலிசாரிடம் முறைப்பாடளித்துள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டிலும் , அதே கூண்டில் வைக்கப்பட்டிருந்த நீலம் மற்றும் மஞ்சள் நிற மக்கா கிளி காணாமற் போயிருந்தது.

பின்னர் அந்தக் கிளி இரத்மலானை பகுதியில் உள்ள வீடொன்றில் கண்டுபிடிக்கப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button