கவிதைகள்

வாழ்க வளமுடன் மந்திரச் சொல்லே!… கவிதை … ஜெயராமசர்மா

வாழ்த்து வழங்கு மலர்ச்சியைக் காட்டு
மகிழ்ச்சி மலரும் மனமும் சிறக்கும்
நட்பு தொடரும் நல்லன விளையும்
ஆனந்தம் அகத்தில் அமர்ந்தே இருக்கும்

கண்ட உடனே களிப்புடன் பேசு
காலையில் கண்டால் வணக்கம் சொல்லு
புதிதாய் கண்டால் மலர்ச்சியைக் காட்டு
புத்துணர் வுன்னுள் புறப்பட்டு நிற்கும்

முரண் படல் என்றும் பொருந்தாது
வாதம் மனதை நொறுக்கி விடும்
இனிய வார்த்தை இன்பந் தரும்
என்றும் புன்னகை எல்லாந் தரும்

கள்ள மனத்தை உடைத்து விடு
கயமைக் குணத்தை ஒழித்து விடு
நல்லதை மனத்தில் இருத்தி விடு
நாளும் மகிழ்ச்சி பொங்கி வரும்

வாழ்க வளமுடன் எனும் வார்த்தை
வளத்தை நலத்தை வழங்கி விடும்
தாழ்வு சிக்கலைத் தவிர்த்து விடும்
தரணியே போற்ற வைத்து விடும்

வாழ்க வளமுடன் வழங்கியே நில்லு
வாழ்க வளமுடன் மாமருந் தாகும்
வாழ்க வளமுடன் மனதைத் திருத்தும்
வாழ்க வளமுடன் மந்திரச் சொல்லே

 

 

 

 

 

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *