பலதும் பத்தும்

திருமணம் செய்தால் 25 நாட்கள் குழந்த பிறந்தால் 150 நாட்கள் லீவு

சீனாவின் சீச்சுவான் மாநிலத்தில் திருமணம் செய்துகொண்டால் 25 நாட்களும் பிள்ளை பெற்றுக்கொண்டால் 150 நாட்களும் வரை விடுப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றமை சீச்சுவான் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீச்சுவான் மாநிலத்தில் குழந்தை பிறப்பு விகிதத்தை உயர்த்த இந்த புதிய திட்டங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. சீச்சுவான் சுகாதார ஆணையம் புதிய பரிந்துரை குறித்து மக்களிடம் கருத்துத் திரட்டுகிறது.

அதேவேளை தற்போது அங்கு திருமண விடுப்பு 5 நாட்களாகவும் மகப்பேற்று விடுப்பு 60 நாட்களாகவும் உள்ளது. அதுமட்டுமல்லாது தந்தையர் விடுப்பையும் 20 நாட்களிலிருந்து 30 நாட்களாக அதிகரிக்க சீச்சுவான் திட்டமிடுகிறது.

குழந்தை வளர்க்கும் பொறுப்பை தம்பதிகள் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவதே அதன் நோக்கமாகும். சீச்சுவான் மாநிலத்தில் 84 மில்லியன் பேர் வசிக்கின்றனர்.

அதேவெளை சீனாவில் தொடர்ந்து 3ஆவது ஆண்டாகச் சென்ற ஆண்டு மக்கள்தொகை சரிந்த நிலையில் அது தொடர்ந்து மோசமாகக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button