பலதும் பத்தும்

யானைகளைக் கொல்ல சிம்பாப்வே அரசு தீர்மானம்!

யானைகளின் தொகையைக் கட்டுப்படுத்த யானைகளைக் கொல்ல சிம்பாப்வே அரசு முடிவு செய்துள்ளது.

சிம்பாப்வேயில் யானைகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வரும் நிலையில் சுமார் 50 யானைகளை கொன்று அவற்றின் மாமிசத்தை மக்களுக்கு பகிர்ந்தளிக்க அரசு முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 800 யானைகள் வசிக்க வேண்டிய இடத்தில் 2550 யானைகள் வசிப்பதால் மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் இடையே மோதல் ஏற்படுவதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது.

மேலும் யானைகளில் இருந்து வெட்டப்படும் தந்தங்களை அரசு பாதுகாக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிம்பாவே அரசின் குறித்த தீர்மானமானது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button