பலதும் பத்தும்

ஜப்பானில் பள்ளி மாணவிகள் குட்டைப் பாவாடை; ஏன் தெரியுமா?

பொதுவாக பள்ளிகளில் மாணவர்கள் அணிந்திருக்கும் சீருடைகள், அனைவரும் இங்கே சமம் என்கின்ற அடையாளமாக உள்ளது.

ஆனால், ஜப்பானின் பள்ளி சீருடை, உடை, அலங்காரம் மற்றும் கலாச்சார நிகழ்வைப் பற்றி அதிகம் பேசுகிறது.

ஜப்பானில் மாணவிகள் பள்ளிக்கு மடிப்புகள் கொண்ட குட்டையான பாவாடையை தான் அணிந்து வருகிறார்கள்.

வெயில்காலம், குளிர்காலம் என பாராமல் ஜப்பானிய பள்ளி மாணவிகள் குட்டையான பாவாடைகளையே அணிகிறார்கள்.

பல ஆண்டுகளாக ஜப்பானில் பிரபலமாக இருந்துவரும் குட்டை பாவாடை, பாப் கலாச்சாரப் போக்காகத் தொடங்கி, பின்னர் ஒரு கலாச்சார வழக்கமாக மாறியது.

1990ஆம் ஆண்டில், ஜப்பானிய பாப் கலைஞரான நமி அமுரோ, அவரது ஃபேஷன் உடைகளுக்காக பரவலாகப் பாராட்டப்பட்டார். இதில் குட்டை பாவாடையும் ஒன்று.

விரைவில், இந்தப் போக்கு ஜப்பானில் உள்ள டீனேஜ் பெண்களை ஈர்க்கத் தொடங்கி அதனை ஏற்றுக்கொள்ளத் தொடங்கினர்.

பள்ளி மாணவிகளும் அதற்கேற்ப தங்கள் சீருடையை வடிவமைத்து இன்று அவர்களின் கல்வி ஆடைக் குறியீடு குட்டைப் பாவாடையாகவே மாறிவிட்டது.

ஏனெனில், இந்த உடை அவர்களை மிகவும் அழகாகவும், ஸ்டைலாகவும் உணர வைத்தது.

இதனால், வானிலையை கூடப் பொருட்படுத்தாமல் பள்ளிச் சிறுமிகள் இந்தப் பாரம்பரியத்தைத் தொடர்ந்து பின்பற்றுகிறார்கள்.

ஆனால், எக்காரணம் கொண்டும் பாவாடையின் நீளத்தில் மட்டும் சமரசம் செய்யப்படுவதில்லை.

இந்தப் போக்கு வெறும் ஒரு உடையாக மட்டுமல்லாமல், ஜப்பானிய கலாச்சாரத்தின் உலகளாவிய அடையாளமாகவும் உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button