பலதும் பத்தும்

உலக அழகு ராணி போட்டியிலிருந்து திடீரென விலகிய பிரித்தானிய அழகு ராணி

2025 ஆம் ஆண்டுக்கான உலக அழகு ராணி போட்டி இந்தியாவின், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இடம்பெற்று வருகிறது.

இதில் இலங்கை உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அழகு ராணிகள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் இறுதிப்போட்டி எதிர்வரும் 31 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

பிரித்தானியாவில் இருந்து ‘மில்லா மாகி’ என்ற அழகு ராணி உலக அழகு ராணிப்போட்டியில் கலந்துகொண்டார்.

தொடக்கத்தில் ஆர்வமாக பங்கேற்ற இவர்இ திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு போட்டியிலிருந்து விலகியுள்ளதாக தெரியவந்துள்ளது

தெலுங்கானாவில் வெப்பம் அதிகரித்து வருவதால்இ மிகவும் சோர்வடைந்த இவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றார். தொடர்ந்து உடல்நிலை மோசமானதால் பிரித்தானியாவுக்கே திரும்பி சென்று விட்டார்.

உலக அழகு ராணி திறமைக்கான போட்டியில் இறுதிப் போட்டியாளராக, இலங்கை அழகி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையின் அழகு ராணியான அனுதி குணசேகர இந்த போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், அனுதி குணசேகர உட்பட 24 சிறந்த இளம் பெண்கள், உலக அழகு ராணி திறமைக்கான இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button