கவிதைகள்
கற்பனைக்குள் அடங்கா கவின்மிகு கவிதைகள்….. கவிதை – 07… சங்கர சுப்பிரமணியன்.

என்னவென்று சொல்வது!
இயக்குநர் படமெடுத்தார்
ஓடவிட்டாலும் கவலையில்லை
இயக்குநர் என்பார்களே
வரைந்தது புரியவில்லை
கிறுக்கலாக சில கோடுகள்
அதுதான் மாடர்ன்ஆரட்ஸ்
அடித்துச் சொல்வேன் நான்
நடிக்கத் தெரியவே தெரியாது
குடிப்பவர்களே குடிமக்கள்
சிறுவர்தான் நம்சொத்து
உறுதியாய் இதைச் சொல்வேன்
அரசு ஏன் தறுதலையாக்குது?
காவல் நிலையம் இருக்கும்
காவலர் ஆர்வமாய் பணியாற்றுவர்
பூவையர் சூறையாடப்படுவர்
உயிருக்கு விலையில்லை
உயிரைக் காக்கவேண்டிய அரசு
மயிரென நினைக்கிறது
போதைப் பழக்கம் ஏற்பட
காக்கும் அரசு வழியமைத்தது
வேலியே பயிரைமேய்கிறதா?

![]()