கவிதைகள்
கற்பனைக்குள் அடங்கா கவின்மிகு கவிதைகள் – கவிதை-4 …சங்கர சுப்பிரமணியன்

சென்ரியு கவிதை:
(இலக்கணம் தேவையில்லா நகைச்சுவை கலந்த ஹைக்கூ கவிதை)
பலநாளாக பின் சென்றான்
ஒருநாள் காதலைச் சொன்னான்
காலணி கன்னத்தை முத்தமிட்டது
பெயர்பெற்ற எழுத்தாளர்தான்
ஆண்டில் மூன்றுநூல் வெளியிடுவார்
விற்பதென்னவோ பத்துதானாம்
வழிமேல் விழிவைத்தான்
காத்திருந்த கன்னி வந்தாள்
சென்றதோ வேறொருவனுடன்
வேட்டையில் வீராதிவீரன் அவன்
வேங்கையை வேட்டையாடுவான்
வீட்டிலோ வீழ்ந்துகிடப்பான்
கண்ணகிக்கு கோயில்செய்வான்
கன்னியர்மேல் அன்பு கொள்வான்
கற்பென்றால் என்னவென்பான்
எதிரில் போலிஸ்அதிகாரி
அவரை உதைப்பதுபோல் பயிற்சிசெய்ய
காலரைப்பிடித்து இழுத்துச்சென்றார்

![]()