உலகம்
மாலைத்தீவுக்கு இஸ்ரேல் நாட்டினர் செல்லத் தடை

சுற்றுலா என்றாலே சட்டென்று நினைவுக்கு வரும் தீவுகளில் ஒன்று மாலைத்தீவு. பல்வேறு நாடுகளில் இருந்து வருடாந்தம் இலட்சக்கணக்கானோர் மாலைத்தீவுக்கு சுற்றுலா செல்கின்றனர்.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மாலைத்தீவில் இஸ்ரேல் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதை கண்டித்து இஸ்ரேலிய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் மாலைத்தீவுக்குள் நுழைய அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது.
பங்களாதேஷ், பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக மாலைத்தீவும் தங்கள் நாடுகளுக்குள் இஸ்ரேலிய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் நுழைய தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.