கவிதைகள்
என்னை நானே… கவிதை… முல்லைஅமுதன்

என்னை நானே கவிதைகளுடன்
எரியூட்டிக்கொள்கிறேன்.
நான் எரிவதை கண்டு அதிர்ச்சியுறவில்லை.
மாறாக, கவிதைகளை எரியூட்டியதில்
அனைத்துமே கோபம் கொண்டிருப்பதை உணர்கிறேன்.
அறைச்சுவர்,சன்னல்,எழுதும் பேனை,வெற்றுத்தாள்கள்,
எழுதி முடிக்கப்பெறாத கவிதைகள்…
அவ்வப்போது வந்து போகும் வண்ணத்துப்பூச்சி…
அறைச் சுவரில் வரையப்பட்டிருந்த ஓவியங்கள்.
என்னைக் காயப்படுத்தாமல் அவள் செல்லாமல் இருந்திருந்தால்..
இவர்களை,இவைகளை இழந்துவிடுவது ஏற்புடையதாயில்லை.
மன்னித்து விடுங்கள்.
நெருப்பின் சுவாலை எங்காவது மூலையில்
எவற்றையாவது காப்பாற்றியிருந்தால்..
அவளிடம் சேர்ப்பிக்கட்டும்.
கவிஞனிடம் காலம் உள்ளவரைக்கும் கற்பு இருந்தது..
உண்மை உலகுக்கும் உறைக்கட்டும்.
முல்லைஅமுதன்
![]()