டிரம்பின் வரி காரணமாக வரவு செலவுத் திட்டத்தை மீளவும் திருத்த வேண்டும் – நாமல் எம்.பி கோரிக்கை

இலங்கைப் பொருட்களுக்கு 44 வீத வரி விதிக்க அமெரிக்கா எடுத்த முடிவைத் தொடர்ந்து இலங்கை பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ளது.
இந்நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் ஒன்றுபட வேண்டும் என்று இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த வரிகள் ஆடை போன்ற முக்கிய துறைகளை கடுமையாக பாதிக்கும் என்றும் வேலையின்மை அதிகரிக்க வழிவகுக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
2022 பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை இன்னும் மீண்டு வருவதால், அரசாங்கத்தின் ஏற்றுமதி இலக்குகள் இப்போது ஆபத்தில் உள்ளன, இதனால் பொருளாதார மீட்சி இன்னும் கடினமாகிறது என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் வெற்றிபெறவில்லை என்றால், அரசாங்கம் வரவு செலுவுத் திட்டத்தை திருத்தி, ஏற்றுமதி வருவாயைப் பராமரிக்க மாற்றுத் தீர்வுகளைத் தேட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இந்த மிகப்பெரிய தடையை நாம் எதிர்கொள்ளும் வேளையில், அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்ட துறைகளை ஆதரிக்க வேண்டிய நேரம் இது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த சவாலை சமாளிக்க ஒற்றுமையின் அவசியத்தையும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மேலும் வலியுறுத்தினார்.