பாராட்டுக் கவிதை… பாரில் கண்டார் பாஸ்கர் அக்கினிக்குஞ்சு இதழை!… சங்கர சுப்பிரமணியன்

அன்றொரு நாளொரு அரங்கில் நின்றேன்
நின்றநேரம் என்னிடத்தில் வந்தார் ஒருவர்
நன்றாய்ப் பேசி அடையாள அட்டை தந்தார்
இன்றுவரை படைத்த படைப்பை தந்தேன்
மொட்டரும்பி சிறிதாய் பூத்த நின்றமலரும்
சுட்டெரிக்கும் வெயில் வந்து சூழ்ந்தபோதும்
பட்டுப் போகாமலே தடைகள் பலவுடைத்து
கட்டழகாய் இன்று பொலிந்து மிளிர்கிறதே
அக்கினிக்குஞ்சாக பாரதி அன்று கண்டான்
தக்கவே இணையவிதழாய் இன்று நாம்காண
முக்காலம் முழுதாய் முயன்று உழைத்ததாலே
எக்காலும் அழியாவிதழை பாஸ்கரும் தந்தார்
அக்கினிக்குஞ்சாய் பிறந்த இதழோ இன்று
சிக்கிய பொந்தில்வைத்த சிறு நெருப்பால்
வெக்கையிலே வெந்து தணிந்த காடுபோல
அக்கறையாய் வந்து தணித்ததுவே நம்தாகம்
பாரதி பற்றவைத்தான் சிறுதீயை சினத்தால்
பாரென செய்தார் பாஸ்கர் தமிழ்மோகத்தால்
கூர்முனை மழுங்கா நல்லாயுதமாகவே நின்று
பாரினில் கண்டார் அக்கினிக்குஞ்சு இதழை
பதினான்கு முடிந்து பதினைந்தாம் ஆண்டை
குதித்து குதூகலமாய நாம் கொண்டாடிவும்
புதிதாக பதினைந்தாம் ஆண்டு பிறந்திடவே
துதித்து அக்கினிக்குஞ்சை வாழ்த்திடுவோம்!
