பலதும் பத்தும்

பிரித்தானியாவில் வாகனம் இல்லாதவரிடம் 400 பவுண்ட் அபராதம்

பிரித்தானியாவை சேர்ந்த 69 வயது ஓய்வூதியம் பெறும் நபர் ஒருவர் மீது வாகன நிறுத்துமிட விதிகளை மீறியமைக்காக 400 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டது.

எனினும் , அபராதம் விதிக்கப்பட்ட நபர் தனது காரை எப்போதோ விற்று விட்டார். இந்நிலையில் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு அவர் காரை வைத்திருந்த போது அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

பாதிக்கபப்ட்டவர் நீதிமன்றத்தில் தவறை விளக்க முயன்றும் அவரின் கருத்துக்கள் புறக்கணிக்கப்பட்டன. அதேவேளை காரை விற்றதற்கான ஆதாரங்களும் அவரிடத்தில் இல்லை என கூறப்படுகின்றது.

அதன் பின்னர், அவர் பிரித்தானியா வாகன உரிம ஆணையத்திடம் இருந்து காரை விற்றதற்கான ஆதாரத்தை பெற்றார். தவறு சரி செய்யப்பட்டாலும், ஓய்வூதியம் பெறுபவர் தனது க்ரெடிட் ஸ்கோரைப் பாதுகாக்க ஏற்கனவே 400 பவுண்டுகளை செலுத்தியிருந்தார்.

இந்நிலையில் பாக்கிங் சேவை வழங்குனரிடம் பணத்தைத் திரும்பக் கேட்குமாறு கடன் வசூல் நிறுவனம் அவரிடம் தெரிவித்துள்ளது. இதனால் விரக்தியடைந்த அவர், தனது பணத்தை திரும்பப் பெற சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button