பலதும் பத்தும்

சீருடை அளவெடுத்த ஆண் தையற்கலைஞர்!; கட்டாயப்படுத்திய ஆசிரியை

தமிழகம் மதுரை தனியார் பாடசாலை ஒன்றில் சீருடை தைக்க வந்த தையற்கலைஞர், மாணவிகளுக்கு தவறான முறையில் அளவு எடுத்ததாக புகார் எழுந்ததுள்ளது.

மாணவிகளுக்கு சீருடை தைப்பதற்காக அளவெடுக்க ஆண் தையற்கலைஞர் வரவழைக்கப்பட்டிருந்த நிலையில், அளவு எடுப்பதை குறித்து கொள்ள ஒரு பெண்ணும் வந்திருந்தார்.

மாணவிகளுக்கு தையற்கலைஞர் அளவு எடுக்கும் போது உடல் பாகங்களில் கைப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் எதிர்த்துள்ளார்.

ஆனால், பாடசாலை ஆசிரியை அந்த மாணவி உள்ளிட்ட அனைத்து மாணவிகளையும் கட்டாயப்படுத்தி அளவு எடுக்க வைக்க வைத்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அந்த மாணவி பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார். பின்னர் அம்மாணவி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதில், நான் 10ம் வகுப்பு படிக்கிறேன் மாணவிகளின் உடல்பாகங்களை தொட்டு தையற்கலைஞர் அளவு எடுத்தார்.

இதுதொடர்பாக என் வகுப்பு ஆசிரியரிடம் கூறியபோது இவ்வளவு பேர் அளவு எடுத்துக்கொள்கிறார். நீ என் பிரச்சனை செய்கிறாய் என்று கூறி தையற்கலைஞம், ஒரு பெண்ணும் வலுக்காட்டாயமாக எனக்கு அளவு எடுத்தனர்.

அப்போது தையற்கலைஞர் எனது உடல் பாகங்களை தொட்டார். எனவே தையற்கலைஞர் மீதும் அவருடன் வந்த பெண் மற்றும் கட்டாயப்படுத்திய வகுப்பு ஆசிரியயை ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

மாணவி புகாரின் அடிப்படையில் தையற்கலைஞர் அவருடன் வந்த பெண் மற்றும் வகுப்பு ஆசிரியை ஆகியோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த சம்பவம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் மாதர் சங்கத்தினர் தனியார் பாடசாலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயன்றபோது பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்பு அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button