இலங்கை
பேச்சுவார்த்தைக்கு வவுனியா வந்த இந்திய மீனவர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்பு

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணும்முகமாக இரு நாட்டு மீனவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை வவுனியாவில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.
வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் உள்ள அருந்ததி தனியார் விருந்தினர் விடுதியில் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
இரு நாட்டு மீனவர் பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு எட்டப்படுவது தொடர்பாக முதல் கட்டமாக இலங்கை – இந்திய மீனவர்களிடையே மீனவர்களின் சொந்த முயற்சியில் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து கடந்த வாரம் முடிவு செய்யப்பட்டது. இதன்படி குறித்த பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
இதன்போது, இந்திய மீனவ பிரதிநிதிகளை இலங்கை மீனவ பிரதிநிதிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்றதுடன், இந்திய மீனவர்களும் இலங்கை மீனவர்களுக்கு நினைவு பரிசில்களை வழங்கி பேச்சுவார்தையை ஆரம்பித்தனர்.