இந்தியா
கோயில் திருவிழாவில் 150 அடி உயர தேர் சாய்ந்து விபத்து

கர்நாடகா தலைநகர் பெங்களூரு அடுத்த ராயசந்திரா பகுதியில் மதுரம்மா கோயில் திருவிழாவின்போது 150 அடி உயர தேர் சாய்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
நேற்று (22) மாலை 5 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. காற்றின் வேகம் அதிகரித்ததால், 150 அடி தேர் ஒரு பக்கமாக சாய்ந்தது
இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![]()