உலகம்
’போர் நிறுத்தத்தை செயற்படுத்தினால் மட்டுமே பணய கைதிகளை விடுவிப்போம்’

போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் செயற்படுத்தினால் மட்டுமே, அமெரிக்க பணய கைதியையும், 4 வெளிநாட்டு பணய கைதிகளின் உடல்களையும் ஒப்படைப்போம் என ஹமாஸ் தற்போது தெரிவித்துள்ளது.
அதுமட்டும் இன்றி, விடுவிக்கப்படும் பணய கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேல் அதிக எண்ணிக்கையிலான பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்றும் ஹமாஸ் வலியுறுத்தி உள்ளது.
இதற்கிடையில், காசா பகுதியில் இஸ்ரேலிய தாக்குதல்களில் உள்ளூர் நிருபர் ஒருவர் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.