முகநூல்
K.A. தங்கவேலு பழம்பெரும் நடிகர்!

K.A. தங்கவேலு பழம்பெரும் நடிகர்.
அவரிடம் பத்திரிக்கையாளர் கேட்டார்,
எதற்காக நீங்கள் தீபாவளி பண்டிகை நாளில் லுங்கியும் தொப்பியும் போடுகிறீர்கள்? என்று
அப்போது அவர் கூறுகையில் தீபாவளி அன்று ஒரு நாடகம் போட்டேன்.அப்போது துணி வாங்க , என்னிடத்தில் காசு எதுவும் இல்லை.
அப்போது லுங்கி வியாபாரியான முஸ்லிம் பாய், என்னிடத்தில் எனக்கும், என்னுடைய நாடக கம்பெனியில் வேலை செய்கிறவர்களுக்கும் ,
லுங்கியை அன்பளிப்பாக கொடுத்தார்.
நானும் என்னுடைய நாடகக் குழு அனைவரும் லுங்கியை அணிந்தோம்.
அவர் கொடுத்த ஞாபகமாக எவ்வளவு தான் எனக்கு வசதி வந்தாலும், தீபாவளி அன்று இந்த லுங்கியும் தொப்பியை அணிந்து கொண்டிருக்கிறேன் என்று சொன்னார்.
நாடகத்தில் நடித்த காலத்தில் இருந்து கடைசிவரை அவருக்கு உறுதுணையாக இருந்தவர் கலைவாணர் என்எஸ் கிருஷ்ணன்தான்.. அதனால்தான், என்.எஸ்.கே வின் உருவப்படத்தை நன்றியை தெரிவிக்கும்விதமாக கடைசிவரை கழுத்தில் அந்த செயினை அணிந்திருந்தாராம் தங்கவேலு.
நேரிலே பேசும்போதும் சரி, படங்களில் நடிக்கும்போதும் சரி, அறச்சொற்களை பயன்படுத்துவதை அறவே தவிர்த்த மாபெரும் கலைஞர்தான் டணால் தங்கவேலு. தமிழ் தவிர பிற மொழிப்படங்கள் எதிலும் நடிப்பதில்லை என்பதை தன் கடைசிவரை மூச்சுவரை கடைப்பித்த தமிழ்ப்பாற்றாளர்தான் நம்முடைய தங்கவேலு..!!