முகநூல்

“தலைவர் இவங்கள விரட்டினது தவறு இவங்கள இங்கே வைச்சு சீமெந்து பூசி இருக்க வேணும்”

“தலைவர் இவங்கள விரட்டினது தவறு இவங்கள இங்கே வைச்சு சீமெந்து பூசி இருக்க வேணும்” என பாராளமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் விஷத்தை கக்கியிருக்கின்றார்
பொதுவெளியில் முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து தேசிய தலைவரின் பெயரை பயன்படுத்தி பகிரப்பட்ட கருத்து மிக அநாகரீகமானதும் தண்டனைக்குரிய குற்றமாகும்
ஆனால் முஸ்லிம் சமூகத்தையும் தமிழ் சமூகத்தையும் மோத விட்டுப் பார்க்க சிங்கள பேரினவாத அரசியல் விரும்புவதால் ஜேவிபி ஆட்சியாளர்களும் புலனாய்வாளர்களும் வேடிக்கை பார்க்கின்றார்கள்
நாம் முஸ்லிம் சமூகத்தை கையாளுவதில் தவறுகளை இழைத்துள்ளோம்
அதே போல் முஸ்லிம் இனத்தவர்களும் தமிழர்களுடைய போராட்டத்திற்கு குந்தகமாக நடந்து கொண்டுள்ளார்கள்
விசேடமாக ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகள் சிங்கள அரசியல்வாதிகளோடு சேர்ந்து போருக்கு பிந்தைய சூழலில் கூட பல இடங்களில் தமிழரின் இருப்பை கேள்விக்குறியாக்கியிருக்கின்றார்கள் என்பதும் உண்மையானது
இங்கே முஸ்லிம் அரசியல்வாதிகளையும் முஸ்லிம் மக்களையும் ஒரே தராசில் வைத்து மதிப்பிடுவது தவறானது என்பதை நாங்கள் ஏற்று கொள்ள வேண்டும்
அதன் பிரகாரம் இரு சமூகத்தையும் மோத வைக்க சிங்கள பேரினவாதம் தொடர்ச்சியாக முயற்சி செய்யும் அவலத்திற்கு நாங்கள் இனியும் துணை போக முடியாது
குறிப்பாக முருங்கனில் ஈரோஸினால் இரு முஸ்லிம்கள் சுட்டுக் கொ*ல்லப்பட்ட சம்பவமும் பாவற்கொடிச்சேனையில் ஈ .பி . ஆர் .எல் .எப் இயக்கம் வன்முறையில் ஈடுபட்ட அவலமும் இரு சமூகங்களும் மோதுவதற்கு முதன் முதலில் ஏது நிலையை உருவாக்கி இருந்தது
இந்த சம்பவங்களை வாய்ப்பாக பயன்படுத்தி கொண்ட சிங்களக் காடையரும் இராணுவத்தினரும் முஸ்லிம் தொப்பி அணிந்து வன்முறையில் ஈடுபட்டு இரு சமூகங்களையும் மோத வைத்தார்கள்
கப்டன் முனாஸ், மேஜர் முத்தலிப் உட்பட்ட பல முஸ்லிம் பேர்களில் சிங்கள புலனாய்வாளர்கள் களமிறக்கப்பட்டு தமிழர்கள் வேட்டையாடப்பட்டார்கள்
முஸ்லிம் ஆயுத குழுக்கள் மற்றும் ஊர்க்காவல் படைகள் களமிறக்கப்பட்டு இரு சமூகங்களுக்குமிடையில் மோதல்கள் தீவிரமாக்கப்பட்டது
இது போதாதென்று பல்வேறு கிராமங்கலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டு அவை சூறையாடப்பட்டன
இதன் தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் சமூகத்தை பு*லிகள் இயக்கம் வெளியேற்றியது .
இவ்விடத்தில் அவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகளையும் அவர்களின் சொல்லொண்ணாத் துயரங்களையும் ஒரு போதும் நியாப்படுத்த முடியாது
இந்த அவலம் மிக தவறான முடிவு என தலைவர் அவர்களே பகிரங்க வருத்தத்தை பதிவு செய்திருந்தார்
ஆனால் இப்போதும் எந்த தொடர்புமின்றி வேறு தரப்பின் தேவைகளுக்காக குறித்த அவலத்தை நியாயப்படுத்த முயற்சிப்பது மிக கொடூரமானது
விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்கள் ஆற்றிய பங்கு மிகவும் காத்திரமானது என்பது இவர்களுக்கு தெரியாது
முதல் களப்பலியான ஜுனைதீன் முதல் 45 இற்கு மேற்பட்டோர் வீரச்சாவடைந்த இருக்கின்றார்கள்
எங்களுக்காக முதன் முதலில் தமிழ் நாட்டில் தன்னை தானே தீயிட்டு கொண்ட திரு அப்துல் ரவூப் என்பவரும் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர் ஆவர்
அதே போல போராட்டத்தைப் பொறுத்தவரை இந்திய இராணுவத்தின் காலம் முதல் பல்வேறு சந்தர்ப்பங்களில் கிழக்கில் முஸ்லிம்களின் பங்களிப்பு காத்திரமானதாக இருந்தது.
இந்த புரிதலின் அடிப்படையில் எங்கள் சுயநிர்ணய அரசியலின் அறமானது எல்லா விதமான ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக குரல் கொடுக்க சொல்லும் தன்மையானதாக இருக்க வேண்டும்.
எண்ணிக்கையில் சிறிய இன்னொரு சமூகம் மீது பொறுப்பின்றி வன்மம் கக்குவதை நியாயம் செய்ய முயற்சிப்பது தமிழ் சுயநிர்ணய அரசியல் அறத்திற்கு முரணானது
வடக்கு கிழக்கு எமது தாயகம் என்பதும் அதில் முஸ்லிம்கள் எமது சக பிரயாணிகள் என்பதையும் ஏற்று கொள்ள வேண்டும்
வடக்கு கிழக்கில் நாங்கள் பேரினவாத அரசியல் செய்ய கூடாது
அர்ச்சுனா இராமநாதனின் மனப்பாங்குகளுக்கு எதிராக நாம் கருமமாற்ற வேண்டும்.
கால தாமதமின்றி அவர் கைது செய்து தண்டிக்கப்பட வேண்டும்
Section 3(1) of Sri Lanka’s ICCPR Act No. 56 of 2007 states: “No person shall propagate war or advocate national, racial, or religious hatred that constitutes incitement to discrimination, hostility, or violence
அப்போது தான் முஸ்லிம் சமூகத்தோடு அவர்களின் அரசியல்வாதிகள் பேரினவாத அரசியலோடு கைகோர்த்து செய்யும் அட்டகாசத்தை பற்றி கேள்வி கேட்கும் தகுதியுடையவர்களாக நாம் எம்மை ஆக்கிக் கொள்ளலாம்.
இனமொன்றின் குரல் – முகநூல்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.