முகநூல்
ஐரோப்பிய கலைமரபில் உடலும் நிர்வாணமும்!

ஐரோப்பிய ஓவிய மரபில் கிரேக்க சிற்பங்கள் முன்மாதிரியானவை. கி.மு ஆண்டுகளுக்கு முன்னரேயே அதில் சாதனைகள் படைத்தார்கள். மனித உடலைப் பேசுபொருளாக்கி அவர்கள் உருவாக்கிய ஓர் மரபு சிற்பக்கலையை இன்றுவரை ரசிக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

ஐரோப்பாவில் , 15 ம் நூற்றாண்டில் வீறு கொண்டெழுந்த மறுமலர்ச்சிக்காலத்தில் சிற்ப – ஓவியத்துறையில் மனித உடல் குறித்த நுணுக்கப்பார்வை மீண்டெழுந்த து.
அதன் விளைவாக மருத்துவத்துறையில் கூட மனித உடல்களின் உள்ளுறுப்புகளின் இயக்கம் குறித்த தேடலில் ஓவியர்கள் கிறிஸ்தவ மதபீடங்களின் தடைகளை மீறி ரகசியமாக உடல் கூறுகளை வரைந்தார்கள்.
இன்றையநவீன மருத்துவத் துறையின் வளர்ச்சி இங்கிருந்தே ஆரம்பித்தது.
அந்த மரபை ஒட்டி கலைக்கல்லூரிகளில் மனித உடல்களை வரைவது ஓர் மரபாக பின்பற்றப்பட்டு வருகிறது. சிற்பம், ஓவியம் , மட்பாண்டம் – ஆடைவடிவமைப்பு போன்ற துறைகளில் பயிலும் மாணவர்களுக்கு அடிப்படையான வரையும் ஆற்றலை வளர்ப்பதற்கு மனித உடல்களை வரையும் முறை பயிற்றுவிக்கப்படுகிறது. நிர்வாணமான உடல்கள் தான் பிரதானமாகப் பயன்படுத்தப்படுகிறது.

கலைக்கல்லூரிகளில் மாணவர்கள் வரைவதற்காக நிர்வாணமாக நிற்க ஆண் – பெண் மாடல்களை வெளியிலிருந்து வரவழைப்பார்கள். சில மாணவர்கள் தங்களுக்கான செலவுகளை சமாளிப்பதற்காக தாமே முன்வந்து நிர்வாணமாக நின்று தமது வருமானத்தை ஈட்டுவார்கள்.
அந்த வகையில் ஐரோப்பிய நகரங்களிலெல்லாம் நிர்வாணக் சிலைகளை நாம் மிகச் சாதாரணமாகக் காணலாம். உடலை காட்டுவது ஐரோப்பிய கலாச்சாரத்தில் குற்றம் அல்ல. அனால் மிகப் பழமையான பண்பாடு – நாகரீகம் என்று சொல்லப்படுகின்ற இந்திய – இந்து – தமிழ் கலாச்சாரத்தில் இது கேலிக்குரியதாக கருதப்படுகிறது.
நோர்வே நாட்டில் உள்ள வீலன்ட் பார்க் [ Vigeland Park ]என்று அழைக்கப்படும் நிர்வாணக் சிலைகள் நிறைந்த பூங்கா , வெளிநாட்டு சுற்றுலா விரும்பிகள் பார்க்கும் ஓர் முக்கிய இடமாகக் கருதப்படுகிறது.

அவை Gustav Vigeland என்ற நோர்வே நாட்டு சிற்பி ஒருவரால் தனியே வடிக்கப்பட்ட சிலைகள் என்பது குறிப்பிடத்தக்கது. அதையொட்டி ஒரு மியூசியமும் உண்டு.
நோர்வே நண்பர் ஒருவர் கூறினார் தமிழர்கள் அதை தூசணப் பார்க் என்று அழைப்பார்களாம்.
தங்களுக்கு புரியாததை எல்லாம் ஏதோ சொல்லி தமக்குள் மறைவாக தற்பெருமை பேசும் ஒரு கிணற்றுத்தவளை கூட்டமாக இருப்பது வேடிக்கை தான்!



இனிவரும் சந்ததி இவற்றை கடந்து விடும்!