கதைகள்

ஊர்வலம்…. கதை… பித்தன்

‘ மனிதன் ஏன் பிறக்கிறான்? என்ற கேள்விக்கு பலதரப்பட்ட பதில்கள் கிடைக்கும். ஆனால், பெண் ஏன் பிறக்கிறாள்? என்று கேட்டால் பிள்ளைகளை பெற்றெடுக்க என்று உடனே பதில் வந்துவிடும்.

முகத்தைத் திருப்பிக் கொள்வதில் பயனில்லை. கொஞ்சம் நிமிர்ந்து பார்க்க தைரியம் வேண்டும் நமக்கு.

நமது சமூகமும் அதன் அமைப்பும் இப்படி. முகத்தை திருப்பிக் கொள்ளும் மனப்பான்மையில் தான் பின்னி கிடக்கின்றது. பெண்மையை பற்றி எண்ணிப் பார்க்கும் பொழுது தாய்மையும் தனித்து நின்று அழிந்து போகும் தன்மையும் தான் மிஞ்சியிருக்கின்றன.

இவற்றை விட வேறு ஏதாவது இருக்கிறதா? இருக்கிறதென்றால் என்ன அது? அது என்ன?

ரகுமத்து தனக்குத்தானே இந்தக் கேள்வியை கேட்டுக்கொண்டாள். கடைசி வரை பதில் கிடைக்கவில்லை அவளுக்கு.

நீட்டி நிமிர்ந்து படுக்கையில் கிடந்தாள் ரகுமத்து. வீடு இரண்டு கிடந்தது. திண்ணையில் எரிந்து கொண்டிருந்த விளக்கு வெளிச்சம் கதவிடுக்கால் நுழைந்து வீட்டுச் சுவரில் நீண்ட ஒளிக்கோடு பொட்டுக் கொண்டிருந்தது. எண்ணங்களை உதரித் தள்ளிவிட்டு ஆழ்ந்த நித்திரையில் மூழ்கி விடத் துடித்தது அவள் நெஞ்சு. முடியவில்லை! நெருப்பில் வாட்டிய வெற்றிலை போல் துவண்டு கிடந்தது அவள் தளிர் மேனி.

நெஞ்சு மட்டும் என்னவோ காதரைச் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது.

ரகுமத்தைப் பொறுத்தவரை உடல், உயிர், உலகம், வாழ்க்கை எல்லாம் நேற்று வரை அந்த காதராகத்தான் இருந்தான். ஆனால் இன்று?

சற்றுத் தூரத்தில் இருந்த கல்யாண வீட்டுச் சந்ததியும் சலசலப்பும் அவள் காதில் விழுந்து கொண்டிருந்தன. வீட்டுக்கு முன்னால் தெருவில் மனித நடமாட்டமும் பேச்சுக் குரலும் கேட்டன. எல்லாம் கல்யாண வீட்டு சந்தடிகள்தாம்! காதலுக்குக் கல்யாணம்!

ரகுமத்தின் புலனில் பாதி அழுது வடியும் தனது எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தது. மற்றொரு பாதி கல்யாண வீட்டு சந்தடிகளை கிரகித்துக் கொண்டிருந்தது.

மூடியிருந்த கண்ணை திறந்து இரட்டைப் பார்க்க வேண்டும்மென்று நினைத்தாள் ரகுமத்து. ஆனால் அந்தக் கண்களுக்குள் காதர் நின்றான். கண்களை திறந்தால் எங்கே அவன் நழுவி விடுவானோ? அவள் கண்களைத் திறக்கவில்லை.

வாழ்க்கையில் நழுவி விட்டவனை நினைவில் இழுத்துப்பிடித்து நிறுத்த முயல்கிறாளா? முயல்வதற்கு என்ன இருக்கிறது? உயிர் இருக்கும் வரை உள்ளம் இருக்கும் வரை அவன் நினைவும் இருக்கும் அது மறையாது: மறக்காது.

மறக்கக் கூடிய வகையிலா அவன் அன்பு செலுத்தினான். அவள் மனம் அசைபோட தொடங்கியது.

**********

அன்று மாலை ஊரே கலகலப்பும் கட்டுக்கோப்பும் நிறைந்திருந்தது. நாளை வரப்போகும் ஹஜ்ஜீ பெருநாளைக் கொண்டாடுவதற்காக மக்கள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். ரகுமத்தின் வீட்டிலும் அதே நிலைதான்.

ரகுமத்தின் காக்கா செய்யது தைக்கக் கொடுத்த உடுப்புகளை எடுத்துவர கடைத்தெருவுக்கு போய்விட்டான். தாயார் கறி,புளி வாங்கச் சந்தைக்கு போய்விட்டாள். ரகுமத்து காலையிலிருந்து வீட்டு வேலைகளை எல்லாம் செய்து முடித்துவிட்டாள். கருக்கலானதும் வீட்டுக்குள் மஞ்சள் நீர் தெளித்துச் சாம்பிராணி புகை போடவேண்டிய வேலைதான் பாக்கி. அத்தோடு இன்னும் ஒரு வேலை: மருதாணி அரைத்துக் கையில் இட்டுக்கொள்ளும் வேலை தான் அது.

எந்த இஸ்லாமியப் பெண்ணுக்கும் மருதாணி போட்டுக் கொள்ளவில்லை என்றால் பெருநாள் கொண்டாட்டமாக இருக்காது. எனவே ரகுமத்து முற்றத்தில் நின்ற மருதாணி மரத்தை நோக்கி நடந்தாள்.

மரம் சற்று வயதானது. நின்றபடியே ஆய்வதற்கு அதில் இலைகள் இல்லை. எனவே மரத்தில் ஏறி ஒரு கந்தில் சாய்ந்தபடி மற்றொரு கந்தில் இருந்த இலைகளை ஆய்ந்து கொண்டிருந்தாள், ரகுமத்து. அந்த சமயம் பார்த்து தானா அவன் வரவேண்டும்? செய்யதிடம் மருதாணி இலை கொஞ்சம் வாங்கப்போகக் காதர் வந்தான்.

வந்தவன் தலைவாசல் கதவைத் திறந்து கொண்டு வளவுக்குள் நுழைந்து விட்டான். காதரைக் கண்டவுடன் ரகுமத்துக்கு ஒன்றுமே ஓடவில்லை. வெட்கத்தில் நெஞ்சு குவிந்தது: முகம் சிவந்தது: வியர்வை அரும்பியது. வேறு வழியில்லை. அவசரவசரமாக கீழே இறங்க முயன்றாள் முடியவில்லை. சேலை சதி செய்தது. அது ஒரு மொட்டைக் கந்தில் கொளுகிக் கொண்டு அவளைத் திண்டாட வைத்தது. பூமியை நோக்கி ஒரு காலும் கந்தில் ஒரு காலுமாக திண்டாடினாள்.

ரகுமத்தை மரத்தில் பார்த்த காதர் தனக்குள் இலேசாகச் சிரித்தபடி வெளியே போக முனைந்தாள். ஆனால் ரகுமத்தின் நிலையை பார்த்ததும் ஆபத்துக்கு பாவம் இல்லை என்று எண்ணியபடி ஒரே பாய்ச்சலில் ரகுமத்தை அணுகி அவள் இடையில் கைகளை கொடுத்து கீழே இறக்கி விட்டான். அவ்வளவுதான். அவிழ்ந்த தன் சேலையை அள்ளிப் பிடித்தபடி ஓடினாள்: ஓடி சமயலறைக்குள் புகுந்து கொண்டாள். ரகுமத்து வெட்கத்தால் உடலும் உள்ளமும் துடித்தது.

ரகுமத்தைத் தொட்டு இறக்கிய காதர் அவள் கூந்தலில் இருந்து நழுவிய மருதாணி பூவை மறக்கவில்லை. அவள் ஓடி மறைந்ததும் கீழே கிடந்த மருதாணிப் பூவை எடுத்து அவள் மறைந்த இடத்தைப் பார்த்தபடி ஒரு புன்சிரிப்போடு முகர்ந்தான். முகர்ந்த படி நகர்ந்தான்.

அவனது அந்தச் சிரிப்பிலே அவள் துவண்டு போனாள். அவன் செயலிலே தன்னை மறந்தாள். அவன் தொட்ட இடத்தை நினைத்து அவனைக் காண வேண்டுமென்று நெஞ்சு தவித்த பொழுது அவனையும் அவனது சிரிப்பையும் நினைத்து நெஞ்சுக்குள்ளே ஒரு சிலிர்ப்பு! நினைவிலே இன்பத்தை அனுபவிக்கும் பொழுது, உணர்விலே எத்தனை வேதனை? அந்த வேதனையிலும் இனிமை இருக்கிறதே!

உணர்ச்சி அலைகள் கொந்தளித்த நிலையில் எல்லாவற்றையும் மறந்து தன் இடுப்பை அவன் தொட்டுப் பிடித்த உணர்வை எண்ணி விம்மியது அவள் நெஞ்சு. அவனது அந்த பிடியிலே அவள் அடைந்த கதகதப்பு: ஆண்மையின் அழுத்தம்!

********

” உம்..,மா…!”

நெஞ்சுக்குள் ஏதோ அடைத்துக் கொண்டதுபோல் திக்கு முக்காடியபடி கண்களை திறந்தாள் ரகுமத்து. வீடு இருட்டுக்குள் கிடந்தது. திண்ணையில் எரிந்து கொண்டிருந்த விளக்கு அணைந்து விட்டது போலும். கல்யாண வீட்டு சந்தடி மும்முரமாகக் கேட்டுக் கொண்டிருந்தது.

பக்கத்து வீட்டு கதவு திறக்கும் ஓசை. அதை எடுத்து கூரையில் தூங்கிக் கொண்டிருந்த சேவல் கூவுகிறது. தெருவிலே கார் ஒன்று கல்யாண வீட்டை நோக்கி ஓடுகிறது. திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்த அவள் தாய் இருமியதும், தாயைச் சுற்றி ஓடியது அவள் நினைவு.

உம்மாவின் மனதில் இருந்த ஆசை அதற்கு மாறாக அங்கே நடக்க போகும்

போடாமல் விட்டனான்… சரி, சரி… எல்லாத்தையும் மறந்திடப்பா… ” என்று கூறி, மடியிலிருந்த நெருப்புப் பெட்டியை எடுத்து, ஒரு குச்சியை கொளுத்தி, ஆச்சியைப் பட்சமுடன் பார்க்கிறார்.

படலையடியிலே நிற்கும் பொலிஸ் மீது அப்புச்சியின் பார்வை விழுகிறது.

“பொலிஸ், இஞ்சை வா… உமக்கு படிக்கட்டில சாக்கு விரிச்சலே இருக்குது. போய்ப்படு… நீர்தான் இந்த வீட்டுக்குப் பெரிய காவலோ? ”

அந்த வார்த்தைகளிலே வேறு அர்த்தங்களை இனங்கண்ட ஆச்சி, நமட்டுச் சிரிப்புச் சிரித்தபடி, பீடிக்கணியம் ” சுத்” தைப் பற்ற வைக்கின்றாள்.

கல்யாணம், பாவம் அந்தத் தாய் உள்ளம் என்ன பாடுபட்டிருக்கும்? வேதனைக்கு மேல் வேதனை எண்ணங்களில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் கூடத்தான்.

இஸ்லாமிய பண்பாட்டில் விவாகமாவதற்கு முன் ஒரு ஆணும் பெண்ணும் நட்புக்க கொள்வது ஒழுக்கம் கெட்ட செயல். இருந்தும் ” இளங்கன்று பயமறியாது” என்பதற்கிணங்க ஆசை நிறைந்த உள்ளத்தோடு அன்பு செலுத்தினர் இருவரும். காதர் ஒரு ஆசிரியன். ரகுமத்து ஏழாவது வரை படித்தவள். எனவே பண்பும் நாகரீகமும் தெரிந்து ஆசையில் வேகமூட்டாமல் இடம் பொருள் அறிந்து தங்கள் அன்பை வளர்த்துக் கொண்டனர்.

சமய சந்தர்ப்பங்களில் — கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது– என்று வேதாந்தம் பேசுவார்கள் முதியவர்கள். ஆனால் இங்கே தாய் தந்தையர்கள் தான் மக்களின் விவாகத்தை நிச்சயக்கிறார்கள். அதிலும் ஆண்களின் தாய் தந்தையர்கள் என்ன நினைக்கிறார்களோ அதுதான் இறைவன் கட்டளை. அந்த கட்டளை காதரைப் பணிய வைத்தது. ரகுமத்தைப் பலி வாங்கியது.

இன்றிரவு அங்கே காதருக்குக் கல்யாணம்! அவன் மணக்கோளத்தில் காட்சியளிக்கிறான். இங்கே இவள் பிணமாகி கொண்டிருக்கிறாளே!

சமுதாயமும் அதன் சம்பிரதாயங்களும் அவிழ்க்க முடியாத சிக்கல். புரிந்து கொள்ள முடியாத புதிர்! இல்லையென்றால் நாலு பேருக்கு முன்னால் தாலி கட்டுவதன் மூலம் முன் பின் தெரியாத ஒருத்தி மனைவியாவதும் நான்கு வருடங்கள் பழகி அன்பு செலுத்தியவள் வேற்றாளுமாகி விடும் அற்புதம் நிகழ்கிறதே!

காதர் வாழ்க்கையில் நல்லவன். ஆனால் தாய் தந்தையர்களுக்கு முன்னால் ஒரு கோழை! ஐந்து ஏக்கர் வேளாண்மை நிலமும், ஒரு புதிய வீடும், சில ஆயிரம் ரூபாய்களும் வேலையை சுலபமாக்கி விட்டன. அவன் மாப்பிள்ளையாகிக் கொண்டிருக்கிறான், முன் பின் தெரியாத ஒரு பெண்ணை மனைவியாக்கிக் கொள்ள.

வெடிச்ச சத்தமும் பெண்களின் குரவை ஒலிகளும் ரகுமத்தின் கழுத்தை நெறித்துக்கொண்டிருந்த அந்த வேலையில், தன் வீட்டில் இருந்து பெண் வீட்டை நோக்கி மாப்பிள்ளையாக மலையணிந்து ராஜ நடை போட்டுக் கொண்டிருந்தான் காதர்.

இருண்டு கிடந்த தெருவெல்லாம் கியாஸ் விளக்குகளின் ஒலி வெள்ளம் பாய்கிறது. ஊர் பிரமுகர்கள் பைத் என்னும் அரபி மொழி வாழ்த்துப் பாடல்களைப் பாடி வர பின்னால் காதர் மாப்பிள்ளைக் கோலத்தில் வந்து கொண்டிருந்தான். மழை பெய்யவில்லை. வெயில் எரிக்கவில்லை. நடுநிசியில் குடை பிடித்து வந்து கொண்டிருந்தான் அவன். ஆமாம் மாப்பிள்ளையாக ஊர்வலம் வந்து கொண்டிருந்தான்.

ஊர்வலம் வரும் சந்தடி கேட்டுத் திண்ணையில் படுத்திருந்த ரகுமத்தின் தாய் கண் விழித்தாள். கல்யாண ஊர்வலம் வீட்டை நெருங்கிக் கொண்டிருந்தது. திண்ணையில் உட்கார்ந்தபடியே சாத்தியிருந்த வீட்டுக் கதவை பார்த்தாள். பிறகு ,

‘ ‘ ரகுமத்து! ரகுமத்து ‘ ‘ என்று மகளை கூப்பிட்டாள்.

‘ ‘ என்ன உம்மா? ‘ ‘ ரகுமத்துதான் குரல் கொடுத்தாள்.

‘ ‘ கலியாண ஊர்வலம் வருகுது புள்ள! ‘ ‘

‘ ‘ நமக்கென்ன உம்மா? ‘ ‘

‘ ‘ ஊர்வலம் பாக்கல்லியா புள்ள ‘ ‘

‘ ‘ என்னத்த பாக்கிர உம்மா? நானும் ஒரு நாளைக்கு ஊர்வலமா போறவ தானே! ‘ ‘

மகள் எந்த ஊர்வலத்தை பற்றி சொன்னாள் என்பது அந்த தாய்க்குத் தெரியாது, தெரிந்து கொள்ள அந்த முதியவள் முயலவில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.