பலதும் பத்தும்

ஆங் சான் சூகியின் வீட்டை ஏலம் விட்ட மியான்மர் அரசுக்கு ஏமாற்றம்

மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக சிறையில் இருந்து போராடியவர் ஆங் சான் சூகி. இதற்காக அமைதிக்கான நோபல் பரிசு பெற்றிருந்தார்.

தொடர்ந்து அங்கு 2015-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் ஆங் சான் சூகி வெற்றி பெற்று அந்த நாட்டின் தலைவராக பதவியேற்றார்.

தொடர்ந்து 2020-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்லில் 81 சதவீத வாக்குகளை பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தார்.

2021-ம் ஆண்டு அந்த நாட்டை மீண்டும் இராணுவம் ஆட்சிக்குள் கொண்வரப்பட்டது. இவர் மீது ஊழல் குற்றச்சாட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மியான்மரில் கடுமையான நிதி நெருக்கடி நிலவி வரும்நிலையில் ஆங் சான் சூகிக்கு சொந்தமான சொத்துகளை ராணுவம் விற்று பொருளாதார இழப்பை சரிகட்டி வருகிறது.

இராணுவ நெருக்கடி நிலையின்போது ஆங் சான் சூகி அடைக்கப்பட்டிருந்த வீடு கையகப்படுத்தப்பட்டது.

மேலும் அதனை ஏலம் விட ராணுவம் நடவடிக்கை எடுத்தது. ஆனால் ஏலம் விடப்பட்ட அந்த வீட்டை யாரும் வாங்க முன்வரவில்லை.

வரலாற்று சிறப்பு வாய்ந்த நினைவு சின்னமாக கருதப்படும் அந்த குட்டி பங்களா, யங்கூனில் உள்ள இனியே ஏரிக்கரையில் கட்டப்பட்டது. சூகியின் தந்தையும், அந்த நாட்டின் விடுதலை போராட்ட வீரரான ராணுவ தளபதி ஆங் சாங்கும் வசித்து வந்த பூர்வீக வீடாக அது உள்ளது.

அந்த வீடுதான் ஆங் சான் சூகி 15 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவைக்கப்பட்டு அறவழியில் போராட வழிவகுத்தது. மேலும் நோபல் பரிசையும் பெற்று தந்தது.

அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, ஹிலாரி கிளிண்டன், ஐ.நா சபை முன்னாள் பொதுச்செயலாளர் பான்-கி-மூன் முதலியவர்கள் அந்த வீட்டில் வைத்துதான் ஆங் சான் சூகி முதலியவர்கள் அந்த வீட்டில் வைத்துதான் ஆங் சான் சூகியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

ஏலம் விடும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. இதனால், மியானரில் ஆளும் ராணுவ அரசுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

ஆங் சான் சூகியின் வீட்டை ஏலம் விட மூன்றாவது முறையாக இராணுவ அரசு முயற்சித்தது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button