ரணில் தலைமையில் விசேட அரசியல் கலந்துரையாடல்; ஐக்கிய மக்கள் சக்தி பிரதிநிதிகள் பங்கேற்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற விசேட அரசியல் கலந்துரையாடலின் போது பல விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொழும்பில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் இந்தக் கலந்துரையாடல் நேற்று நடைபெற்றது.

சம்பந்தப்பட்ட கலந்துரையாடலை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்பாடு செய்திருந்ததாக பங்கேற்றிருந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதியை ஆதரித்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இதன்போது கலந்துக்கொண்டிருந்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன் மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்துக்கொண்டிருந்தமை விசேட அம்சமாகும்.

மேலும், முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உதய கம்மன்பில, அனுர பியதர்ஷன யாப்பா, துமிந்த திசாநாயக்க, காஞ்சன விஜேசேகர, சாகல ரத்நாயக்க, மற்றும் வஜிர அபேவர்தன ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

இதன்போது வரவிருக்கும் தேர்தல்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டது.

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிகளின் பேச்சுவார்த்தைகள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *