அரசியலமைப்பில் இல்லாத போதும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வீடுகளைத் தேடுகிறது அரசு

முன்னாள் ஜனாதிபதிகளை மக்கள் வரிபணத்தில் பராமரிக்க வேண்டும் என்றோ, அவர்களுக்கு வீடுகள் கொடுக்கப்பட வேண்டும் என்றோ அரசியலமைப்பில் எங்கேயும் குறிப்பிடப்படவில்லை என்று அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜனாதிபதிகளின் உரித்துகள் தொடர்பான சட்டத்தில் மாத்திரம் பொருத்தமான வீட்டை கொடுக்கலாம் அல்லது அவர்களின் ஓய்வூதியத்தில் மூன்றில் ஒன்று பகுதியை வழங்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் இதன்படி அவர்களுக்கு பொருத்தமான வீடுகளை கொடுப்பது தொடர்பில் ஆராய்கின்றோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்குவது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் சிறப்புரிமைகள் தொடர்பான ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை கிடைத்துள்ளது. அந்த அறிக்கையில் உள்ள விடயங்கள் தொடர்பில் நாங்கள் ஆராய்ந்து வருகின்றோம். அதன்படி செய்யக் கூடியவற்றை நாங்கள் செய்வோம். எவ்வாறாயினும் மக்களின் வரிப் பணத்தில் அரசியல்வாதிகளின் தொடர்ந்தும் அரசியல்வாதிகளை பராமரிக்க நாங்கள் நடவடிக்கை எடுக்கப் போவதில்லை. மக்களின் வரிப் பணத்தில் வாகனங்களை பெற்றும், எரிபொருளை செலவழித்தும் மற்றும் வீட்டில் இருந்துகொண்டு கடிதம் அனுப்பாமல் நாங்கள் போக மாட்டோம் என்று மக்களுக்கு கூறுகின்றனர். அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர். ஆனால் அரசியலமைப்பில் அவ்வாறு எதுவும் கிடையாது. அதில் முன்னாள் ஜனாதிபதிகளை பராமரிக்க வேண்டும் என்றோ, வீடு கொடுக்க வேண்டும் என்றோ எங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் 1986 ஜனாதிபதிகளின் உரித்துகள் தொடர்பான சட்டத்தில் பொருத்தமான வீட்டை கொடுங்கல் இல்லாவிட்டால் ஓய்வூதிய பணத்தில் மூன்றில் ஒரு பகுதியை வீட்டுக்காக கொடுங்கல் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி பொருத்தமான வீட்டை வழங்குவது தொடர்பில் ஆராய்வோம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *