நீண்ட காலத்திற்கு அரசியலில் இருக்க மாட்டேன்!

போக்குவரத்து பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரான இராமநாதன் அர்ச்சுனா, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், தான் மிகவிரைவில் அரசியலில் இருந்து ஓய்வுபெறவுள்ளதாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று கருதி எம்.பி.பி.எஸ்., எம்.எஸ்.சி. உள்ளிட்ட பட்டங்களை கற்கவில்லை. எனக்கு உண்மையில் அரசியல் விரும்பமும் கிடையாது. 38 வருடங்களில் நான் ஒருதடவையேனும் வாக்களித்தது கூட இல்லை.

நான் மக்களுக்காகத்தான் அரசியலில் களமிறங்கினேன். ஆனால், இதில் நீண்ட காலத்திற்கு இருக்க மாட்டேன். இருக்கும்காலம் வரை நேர்மையாக இருப்பேன்” இவ்வாறு அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *