அமெரிக்க ஏர்லைன்ஸ் விபத்து; 30 உடல்கள் மீட்கப்பட்டதாக தகவல்!

64 பேரை ஏற்றிச் சென்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் பிராந்திய பயணிகள் ஜெட் விமானம், அமெரிக்க இராணுவத்தின் பிளாக் ஹாக் ஹெலிகொப்டருடன் மோதி ஏற்பட்ட விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

புதன்கிழமை (29) இரவு வொஷிங்டன் டிசியின் ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்திற்கு அருகே நடுவானில் ஏற்பட்ட இந்த மோதலை அடுத்து விமானம் குளிர்ச்சியான பொடோமேக் ஆற்றில் விழுந்து நொறுங்கியது.

NBC யின் வொஷிங்டன் துணை நிறுவனமான NEWS 4 செய்திச் சேவை, ஆற்றில் இருந்து 30 க்கும் மேற்பட்ட உடல்களை மீட்கப்பட்டதாக தெரிவித்தது.

கன்சாஸின் விச்சிட்டாவிலிருந்து புறப்பட்ட அமெரிக்கன் ஏர்லைன்ஸின் 5342 விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஜெட் விமானத்தில் 60 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்கள் இருந்ததை அமெரிக்கன் ஏர்லைன்ஸ் உறுதிப்படுத்தியது.

அதேநேரம், ஹெலிகொப்டர் பயிற்சியின் போது மூன்று வீரர்களை ஏற்றிச் சென்றதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பயணிகள் ஜெட் விமானம் ரீகனில் தரையிறங்க நெருங்கிக்கொண்டிருந்தபோது நடுவானில் மோதல் ஏற்பட்டது.

இதேவேளை விமான விபத்து குறித்து விசாரணையைத் தொடங்குவதாக பென்டகன் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *