மகிந்த மீது டிரோன் தாக்குதல் நடக்காது

புலனாய்வு தகவல்களை அடிப்படையாகக் கொண்டு முன்னாள் ஜனாதிபதிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கான பாதுகாப்பு தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்படும் என்று பாதுகாப்பு செயலாளர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற விமானப்படையின் எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ். துய்யகொந்த தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சில் நேற்று புதன்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பிலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ மீது டிரோன் தாக்குதல் நடத்தப்படலாம் என்று வெளியான தகவல்கள் தொடர்பிலும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அதன்போது அவர் மேலும் கூறுகையில்,

டிரோன் தாக்குதல் தொடர்பான தகவல்கள் குறித்து நாங்கள் ஆராய்ந்தோம். அவ்வாறு நடக்குமாக இருந்தால் விசேட புலனாய்வு தகவல் இருக்க வேண்டும். அவ்வாறான எதுவும் கிடையாது. எவ்வாறாயினும் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் கொள்கை ரீதியில் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். புலனாய்வு தகவல்களை அடிப்படையாகக் கொண்டு எப்போதும் பாதுகாப்பில் புதுப்பிப்புகளை செய்வோம். விசேட பிரஜைகளின் பாதுகாப்பு தொடர்பில் ஆராய்ந்து தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம். தற்போதுள்ள மதிப்பீட்டின் அடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *