இலங்கை

புதிய அரசியலமைப்பு தொடர்பில் தமிழரசின் நிலைப்பாடு என்ன?; அறிவித்தார் சுமந்திரன் 

அரசாங்கம் ஒன்றுமே சொல்லாமல் அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக நாம் யோசனைகளை முன்வைத்தல் என்பது அவர்களுக்கு ஏதுவான ஒரு விடயமாகக் கூட அமையலாம் என இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் எம்.பி.யும் ஊடகப் பேச்சாளருமான் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

பருத்தித்துறையில் உள்ள யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில்,புதிய அரசியலமைப்பு தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளை சந்தித்து வருகின்றார். அதே நேரம் உங்களது கட்சியின் உறுப்பினரான ஸ்ரீதரன் அவர்களையும் சந்தித்து கலந்துரையாடியிருக்கின்றார் இந்த புதிய அரசியலமைப்பு தொடர்பில் உங்களது கட்சியின் நிலைப்பாடு என்ன? என எழுப்பப்பட்ட கேள்விக்கே இவ்வாறு பதிலளித்த சுமந்திரன் மேலும் கூறுகையில்,

அரசாங்கத்திடம் ஒரு கோரிக்கையை விடுத்து நாங்கள் தீர்மானம் ஒன்றை எடுத்திருக்கின்றோம். அரசாங்கம் தாம் செய்வதாகச் சொன்ன அந்த விடயத்தை முதலிலே செய்ய வேண்டும். அதை விடுத்து அரசாங்கம் ஒன்றுமே சொல்லாமல் அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக யோசனைகளை முன்வைத்தல் என்பது அவர்களுக்கு ஏதுவான ஒரு விடயமாகக்கூட அமையலாம். ஆகையால் முதலில் அவர்கள் தங்களது ஆலோசனையை முன்வைக்க வேண்டும். பின் பேசவேண்டும். இப்படியான ஒரு விடயத்தை இருப்பதாக அரசாங்கம் அறிவித்ததன் காரணமாக எங்களது கட்சி ஒரு விசேட குழுவை நியமித்திருக்கிறது அந்த குழு அது சம்மந்தமான முடிவை அறிவுக்கும் என்றார்.

தங்களால் ஒரு அரசியலமைப்பு தொடர்பான வரைபு ஏற்கெனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த வரைபு ஒற்றை ஆட்சிக்கு உட்பட்டது எனவும் இதனை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்று கொண்டால் தமிழர்களுக்கு பெரிய விளைவை ஏற்படுத்தும் எனவும் கஜேந்திரகுமார் தெரிவித்திருக்கின்றார் இவ்வாறான அரசியலமைப்பு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடும் நிறைவேற்றப்பட்டால் எதிர்காலத்தில் தமிழர்களுக்கு அரசியல் செய்வதற்கு ஒன்றுமில்லை. அவ்வாறான அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டால் அரசியலில் இருந்து ஒதுங்கி கொள்வேன் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக உங்களது கருத்து என்ன ?என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில்,
அவர் அரசியலில் இருந்து விலகுவதும் விலகாததும் அவரைபொறுத்தது. அதைக்குறித்தது நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை . ஆனால் 2015 -2019 வரையான காலகட்டத்தில் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அந்த வேளையிலே எங்களுடைய கடைசி மிகத்தெளிவான ஒரு நிலைப்பாட்டை எடுத்திருந்தது.

அதாவது நாங்கள் பெயர்ப்பலகைகளிலே தங்கியிருக்கவில்லை. இது சம்பந்தன் திரும்ப திரும்ப பாராளுமன்றத்திலே சொல்லியிருக்கின்றார்.தமிழ் தேசிய கூட்டமைப்பாக மூன்று கட்சிகளும் சேர்ந்து எடுத்த நிலைப்பாடு அது அதோடு சேர்ந்து சில வரைவுகள் செய்யப்பட்டிருந்தன. வரைபிலே ஒற்றை ஆட்சி என்ற கருத்துக்கு இடமில்லை என்றார்.

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.