இலங்கை

யோஷிதவிடமிருந்த 9 துப்பாக்கிகள்; 7 கைபற்றப்பட்டது

உயிர் பாதுகாப்புக்காக அனுமதிப்பத்திரத்துடன் வழங்கப்பட்டிருந்த 1697 துப்பாக்கிகளில் 1367 துப்பாக்கிகள் மட்டுமே மீள ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய துப்பாக்கிகளை ஒப்படைக்காதவர்கள் அவற்றை ஒப்படைக்காவிட்டால் அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற விமானப்படையின் எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ். துய்யகொந்த தெரிவித்துள்ளார்.

மேலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஸவிடம் இருந்த ஒன்பது துப்பாக்கிகளில் ஏழு துப்பாக்கிகளை பாதுகாப்பு அமைச்சகம் கையகப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

பாதுகாப்பு அமைச்சில் நேற்று புதன்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அதன்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேலும் கூறுகையில்,

கடந்த வருடத்தில் உயிர் பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கிகள் தொடர்பில் கணக்காய்வு நடத்தப்பட்டது. இதன்படி அனுமதிபெற்ற 1697 துப்பாக்கிகளும், அனுமதிப்பத்திரம் கொண்ட 1550 பேரும் இருந்ததுடன் அவற்றில் 1367 துப்பாக்கிகள் கணக்காய்வுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதுவரையில் 182 துப்பாக்கிகள் மீள கொடுக்கப்படவில்லை. எவ்வாறாயினும் கணக்காய்வுக்காக அவற்றை ஒப்படைக்காதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேவேளை கணக்காய்வின்படி சிலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. ஆனால் இனி பாதுகாப்பு அமைச்சினால் ஒரு துப்பாக்கிக்கே அனுமதி வழங்கப்படும். புலனாய்வு தகவல்களில் எவருக்காவது ஒன்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கி அவசியம் என்று உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே ஒன்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் வழங்கப்படும். இல்லாவிட்டால் ஒன்று மட்டுமே வழங்கப்படும். இதனால் ஒன்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கிகளை பாதுகாப்பு அமைச்சு பெற்றுக்கொள்ளும்.

அத்துடன் யோஷித ராஜபக்‌ஷவிடமிருந்த ஒன்பது துப்பாக்கிகளில் ஏழு துப்பாக்கிகளை பாதுகாப்பு அமைச்சகம் கையகப்படுத்தியுள்ளது. தற்போது இரண்டு துப்பாக்கிகள் உள்ளன. அவற்றை ஒன்றை ஒப்படைக்க வேண்டும். அதேபோன்று எஞ்சிய துப்பாக்கி தொடர்பிலும் முறையாக ஆராய்ந்தே வழங்கப்படும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.