நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழில் வைத்து சிறப்புப் பொலிஸ் குழுவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அவர் மீது பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராகக் குற்றவியல் வற்புறுத்தல் மற்றும் கடமைக்கு இடையூறு விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.youtube.com/watch?v=xhZc83YacLU

அநுராதபுரம் ரம்பேவ பகுதியில் கடந்த 21 ஆம் திகதி ” VIP விளக்குகளைப் பயன்படுத்தி ஏனைய வாகனங்களுக்கு இடையூறு விளைவித்தமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பயணித்த வாகனத்தை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதன்போது போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுடன் இராமநாதன் அர்ச்சுனா வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், இதனையடுத்து பொலிஸார், அர்ச்சுனாவிடம் அவரது அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரத்தை காண்பிக்குமாறு கோரியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அவர் குறித்த ஆவணங்களை வழங்க மறுத்து பொலிஸாரிடம் அடாவடியாக நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *