உத்தரப்பிரதேசில் கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு!

இன்றைய தை (மௌனி) அமாவாசையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் திரிவேணி சங்கமத்தில் திரண்டதில் நிறுவப்பட்ட தடைகள் உடைந்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்க ஏராளமான அம்பியூலன்ஸகள் விரைந்து செயற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த நபர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுதமிக்கப்பட்டனர்.

குறைந்தபட்சம் 15 உடல்கள் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதாக ஆரம்பக் கட்ட தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

எனினும், இந்த சம்பவத்தில் குறைந்தது 30 முதல் 40 பேர் காயமடைந்திருக்கலாம் என்று நேரில் பார்த்தவர்களின் சாட்சியங்களை மேற்கொள்ளிட்டு இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் மூன்று முறை தெலைபேசியில் உரையாடி நிலைமையை கேட்டறிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன்போது நிலைமையை இயல்பு நிலைக்கு கொண்டு வரவும், மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா ஆகியோரும் ஆதித்யநாத்திடம் பேசி, மத்திய அரசின் அனைத்து உதவிகளை வழங்குவதையும் உறுதி செய்தனர்.

இதனிடையே பக்தர்கள் புதின திரிவோணி சங்கமத்தில் நீராடிவிட்டு அங்கிருந்து விரைந்து வெளியேறுமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

திரிவேணி சங்கமம் என்பது கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய புனித நதிகள் இடமாகும்.

இது இந்துக்களால் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.

மகா கும்பமேளாவின் போதும் அமாவாசை நாள் அன்றிலும் குறிப்பாக தை மா அமாவாசை போன்ற சிறப்பு ஸ்நானத் திதிகளில் நீராடுவது மக்களின் பாவங்களைக் கழுவி அவர்களுக்கு மோட்சத்தை அளிப்பதாக நம்பப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *