இலங்கை

யோஷிதவுக்கு பிணை வழங்கப்படுவதால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அர்த்தமில்லை!

”முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ஷவுக்கு பிணை வழங்கப்படுவதால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்று அர்த்தப்படுத்த முடியாது” என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

யோஷித ராஜபக்ஷவுக்கு பிணை வழங்கப்பட்டமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” குறித்த வழக்கில் யோஷித ராஜபக்ஷ இதுவரை சந்தேக நபராகப் பெயரிடப்படவில்லை. யோஷித ராஜபக்ஷ தொடர்புபட்டுள்ள குறித்த பணமோசடி சம்பவம் சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.

இதுவரை, யோஷித இந்த வழக்கில் சந்தேக நபராகப் பெயரிடப்படவில்லை. உயர் நீதிமன்றத்தில் ஒரு நபருக்கு குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பு, சந்தேக நபராக அவரிடமிருந்து வாக்குமூலம் பெறுவது அவசியம்.
வாக்குமூலம் பெறுவதற்காக இந்த நபரை சந்தேக நபராக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சட்டமா அதிபர் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதுதான் வழக்கமான நடைமுறை. பிணை சட்டத்தின் விதிகளின்படி, அவர் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்காவிட்டால், அல்லது நாட்டை விட்டு தப்பிச் செல்லாவிட்டால் பிணை வழங்குவது இயல்பானது. பிணை வழங்கப்படுவதால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று அர்த்தமல்ல” இவ்வாறு நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.