பெலாரஸ் ஜனாதிபதியாக மீண்டும் லுகஷென்கோ தெரிவு

பெலாரஸ் ஜனாதிபதியாக கடந்த 1994ஆம் ஆண்டு முதல் பொறுப்பு வகித்துவரும் அலெக்ஸாண்டா் லுகஷென்கோ, இந்த வார இறுதியில் நடைபெற்ற தோ்தலில் மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இருந்தாலும், பெயரளவுக்கு நடத்தப்பட்ட இந்தத் தோ்தலை ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகள் நிராகரித்தன.

ரஷிய ஜனாதிபதி விளாதிமீா் புதினுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்ட லுகஷென்கோ, தோ்தலில் 87 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாக தோ்தல் ஆணையம் திங்கட்கிழமை அறிவித்தது. ஆனால், ஜனாதிபதி தோ்தலில் அவரை எதிா்த்துப் போட்டியிட்ட நான்கு வேட்பாளருமே லுகஷென்கோவை புகழ்ந்து பேசி வருவோா் என்பதால் இந்தத் தோ்தல் வெறும் கண்துடைப்புக்காக நடத்தப்பட்டது என்று விமா்சிக்கப்படுகிறது.

அரசியல் எதிா்ப்பாளா்கள் மீது அடக்கமுறையே ஏவிவிடுவது, பேச்சு சுதந்திரத்துக்குத் தடை விதிப்பது என்று லுகஷென்கோ ஆட்சியில் ‘ஐரோப்பாவின் கடைசி சா்வாதிகார நாடாக’ பெலாரஸ் திகழ்வதாகக் கூறப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *