முதல் சந்திப்பில் வசியம் செய்யும் ராசியினர்…

ஒருவரை பார்த்தவுடனே பிடிப்பது என்பது மிகவும் அபூர்வமானது. ஆனால், ஒரு சில ராசியினருக்கு இயல்பாகவே அந்த வசீகரத் தன்மை உள்ளது என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அதன்படி அனைவருக்கும் பார்த்தவுடன் பிடிக்கும் ராசிகள் குறித்து பார்ப்போம்.

சிம்மம்

இயல்பிலேயே வசீகரத் தன்மைக் கொண்ட சிம்ம ராசியினர் தன்னம்பிக்கை அதிகம் கொண்டவர்கள். இதனால் முதல் சந்திப்பிலேயே அவர்களை மற்றவர்களுக்கு பிடித்துவிடும். அன்பான ஆளுமையால் மற்றவர்கள் இவர்களை விரும்புவார்கள். இவர்களிடம் பேச்சுத்திறன், நகைச்சுவைத் திறன் போன்றவை அதிகம். இதனால் இவர்களை ஒரு தடவை பார்த்தவர்கள் மறக்கவே மாட்டார்களாம்.

துலாம்

முதல் பார்வையிலேயே மற்றவர்களை ஈர்க்கும் துலாம் ராசியினர் தன்னகத்தே ஒரு தனித்திறமையைக் கொண்டிருப்பார்கள். இவர்கள் மற்றவர்களை அணுகும் விதத்தால் அனைவராலும் விரும்பப்படுவார்கள். இவர்களின் உரையாடல் மற்றவர்களை ஈர்க்கிறது. இவர்களின் நேர்மறையான அணுகுமுறை மற்றவர்களின் நீடித்த அன்பைப் பெற உதவுகிறது.

விருச்சிகம்

முதல் சந்திப்பிலேயே எவ்வாறு வசீகரிக்கலாம் என்பதை நன்கு உணர்ந்தவர்கள் விருச்சிக ராசியினர். இவர்களிடம் கொஞ்சம் மர்மம் மற்றும் தீவிர ஆளுமை இருக்கும். இது மற்றவர்களை ஈர்க்கிறது. இவர்களிடம் நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மை அதிகம். இது மற்றவர்களுடன் ஆழமான தொடர்புகளை உருவாக்க உதவுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *