எழுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் தமிழ்ப் பெண்! … கவிதை …. சைவப்புலவர், கவிஞர் கல்லோடைக் கரன் (மெல்பேண்)

தன தானதானத் தன தானதானத்
தன தானதானத் தனதா
கண் வானமாகக் கரும் நீலமாகக்
கன மழையென்றாகப் பொழியா
விண் மேகமாக வள முகிலென்றாக
விரி கூந்தலென்றாக விரியா
தண் நிலவென்றாகத் தரும் ஒளியென்றாகத்
தன் முகமென்றாக ஒளிரா
பண் இசையென்றாகப் படர் கொடியென்றாகப்
பல விதமென்றாகப் பெண்ணே !
மின் கீற்றென்றாகப் பொன் ஊற்றென்றாக
மென் பார்வையென்றாகக் குளிரா
கன் னலினிப்பாகக் கன் னமிரண்டாகக்
கனிச் சுவைமூன்றாக இனியா
பொன் னிறத்தான பூத் திறத்தான
பெறு கின்றவனப்பாகத் தோயா
தன் னிதழ்தேனாகத் தருசுவை அமுதாக
திகழ் கின்றவதிசயம் பெண்ணே !
நாற் குணங்களொன் றாய்நாற் படையுமென்றாய்
நன்றே ஆட்சிநனி நடாத்த
ஆற் றும்பணி அறிவாற்றல் துணைக்கொண்டு
ஆளும் பெண்மை யரசும்
வீற் றிருந்துவீர விதையின்கண் முளைத்த
வீரவ ரினத்திற் குத்தாயாய்ச்
சாற் றும்தனித் தன்மைகொண் டிங்கிலங்கிச்
சீறும்புலி யாவாள்தமிழ்ப் பெண்ணே !
அஞ் சுவதஞ்சி யடங்கித் தனையடக்கிவாழ்வில்
அஞ்ச வொன்று மில்லையென்றொரு
நஞ்சரவ முன்னும் நேர்பார் வையளாய்
நிமிர்துணி வுளங் கொண்டாள்
பஞ்ச னையாள் பதிவிரதா மாண்பனையாள்
பசும் மொழிக் கிள்ளையாள்
வஞ்சி யிவளென் றெல்லோரு மேத்துமொரு
வண்ணமுடை யாள்தமிழ்ப் பெண்ணே !

![]()