ரோஹிங்கியாக்களை மியன்மாருக்கு திருப்பி அனுப்பினால், அது நாட்டின் நற்பெயருக்கு ‘களங்கம்’
இந்த மண்ணைக் குணப்படுத்துவேன் என தனது கன்னி உரையில் உறுதியளித்து, அரச அடக்குமுறையின் கசப்பான அனுபவங்களைக்க கொண்ட அரச தலைவரான ஜனாதிபதிக்கு இது பொருத்தமான நடவடிக்கையல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
“பல தசாப்தங்களாக பாதாள அரசியலில் ஒளிந்து கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட ஒரு கட்சியின் தலைவரான நீங்கள், அரச அடக்குமுறையின் அளவை கசப்பான அனுபவத்திலிருந்து அறிவீர்கள். ”
எனவே, இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியாக்களை பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய வேறு நாட்டிற்கு அனுப்பப்படும் வரையில் அவர்களை மியன்மாருக்கு அனுப்பாமல், அவர்களின் நலனையும், மனித உரிமைகளையும் பாதுகாத்து ஆதரவற்றவர்களுக்கு அடைக்கலம் வழங்கும் இலங்கையின் விருந்தோம்பலின் அதிசயத்தை உலகிற்கு எடுத்துக்காட்டுவதற்கான வாய்ப்பாக இதனைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.
அந்த நல்ல செயலுக்கு ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட அமைப்புக்கள் மாத்திரமன்றி எதிர்க்கட்சிகளின் ஆதரவும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவுக்கு கிடைக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தனது கடிதத்தில் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்
![]()