நாடாளுமன்ற உறுப்பினர்களும் கல்வித் தகமைகளும்… ஏலையா க.முருகதாசன்

இலங்கை அரசாங்க நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த சபாநாயகரின் கல்வித்தகைமை பற்றி எழுந்த சந்தேகச் சர்ச்சை காரணமாக சபாநாயகர் பதவி விலகியுள்ளமை சரியான முறையும் முன்னுதாரணமுமமாகும்.தனக்குத்தானே தண்டனை கொடுத்த நற்செயல்.சரியான சான்றிதழ்களைக் கைவசம் வைத்திருக்காது பொதுவெளியில் அதுவும் தேர்தல் பிரச்சாரகூட்ட விளம்பரங்களில் கலாநிதி என்பதன் சிங்கள மொழி பெயர்ப்பான ஆச்சார்ய என்பதை விளம்பரப்படுத்தியது இன்னும் பெருந் தவறாகும்.
மற்றவர்களால் சுட்டிக்காட்டப்படும் வரை அவர் அமசடக்காக இருந்தது அவரின் கல்வித்தகமைக்கே இழுக்கு.இவருடைய கல்வித்தகமையை மட்டுமல்ல அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் திணைக்கள அதிகாரிகள் என அனைவரினதும் கல்வித்தகமைகள் எதிர்க்கட்சியினரால் ஆராயப்படப் போகின்றது மட்டுமல்ல அனைத்துக் கட்சிகளிலும் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித்தகமையும் வெளிவரப் போகின்றது அது நல்லதற்கே.
ஜனாதிபதி தோழர் அநுரகுமார திசநாயக்கா படித்தவர்களால் நாடாளுமன்றம் நிரப்பப்பட வேண்டும் என தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார் அதை அவர் நிறைவேற்றுவார்.
இலங்கையைப் பொறுத்தவரை அது சிங்களவராயினும் தமிழராயினும் முஸ்லீம்களாயினும் தமது கல்வியில் மிகக் கவனமுள்ளவர்கள்.கவனமுள்ளவர்கள் என்பதைவிட அது தமது வாழ்வின் உயர்வினைக் குறிக்கம் பண்பு என நினைப்பவர்கள்.
பெறுமதியான கல்வியைக்; கொண்ட நாடு இலங்கை.அத்தகு பெயர் கொண்ட நாட்டில் தமது கல்வித் தகைமை தொடர்பாக அது யாராக இருந்தாலும் தவறான சான்றிதழ்களை சமர்ப்பிக்க முயல்வதோ,தமது கல்வித்தகைமை தொடர்பாக பொய்யான தகவல்களை வெளிப்படுத்த முயல்வதோ அவமானமான செயலாகும்.
செய்திகளின்படி,தனது கல்வித்தகைமைச் சான்றிதழ் தன் கைவசம் இல்லையெனச் சொன்னமை வேடிக்கையானது.
ஒருவர் தனது கலவித்தகைமைக்கான சான்றிதழைக் பெற்றுக் கொண்டதன் பின்னரே தனது கல்வித்தகைமை பற்றி பொதுவெளியில் வெளிப்படுத்த வேண்டும்.
இது ஒருபுறம் இருக்க ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் எனது முகநூல் நண்பர் தனது முகநூலில் தனது கல்வித்தகமை பற்றி வெளிப்படுத்துகையில் தமிழ் நாட்டின் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தான் புp.ஏ பட்டம் பெற்றதாக எழுதியிருந்தார்.
அவர் பல ஆண்டுகளாக ஜேர்மனியில் இருந்து வருபவர் என்பது எனக்கு நன்கு தெரியும்..அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்களுடைய முகநூலில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பி.ஏ பட்டம் எடுத்ததாகப் போட்டிருக்கிறீர்கள் என்று நான் சொல்லி முடிக்கமுந்தி ஓ என்று இழுத்தவர் எடுக்கலாந்தானே எனச் சடைஞ்சு சடைஞ்சு கதைக்கத் தொடங்கினார்.
அவர் அங்கை இங்கை என இழுத்துக் கதைச்சதை வைத்து இவர் ஏதோ தில்லாலங்கடி வேலை பார்த்து பி.ஏ சேர்ட்டிபிக்கற்றை வாங்கியிருக்கிறார் என எனக்குப் புரிந்தது.
நான் ஊரிலை இருக்கிற போதும் ஒரு விசயத்தைக் கேள்விப்பட்டனான் தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்கள் சிலவற்றில் காசு கொடுத்துப் பட்டங்கள் வாஙகலாம் என்று அது உண்மையா என்றதும் அவர் ஒ அதுவும் நடக்குதுதான் என்றார்.
நான் விடவில்லை முந்தி ஒருக்கா எனக்குச் சொன்னீங்கள் அங்கை காசு கொடுத்தால் பட்டம் வாங்கலாம் என்று அது போலத்தான் நீங்களும் வாங்கினனீங்களோ என்று கேட்டதற்கு அவரால் பதில் எதுவும் சொல்ல முடியவில்லை.
நான் தொடர்ந்து நீங்கள் என்ன செய்தனீங்களோ தெரியாது,அப்படி யார் காசு கொடுத்து வாங்கினாலும் அது கேவலமான வெட்கப்பட வேண்டிய செயல்தான் என்றன்.அவர் ஒருமுறை காசு கொடுத்து பி.ஏ பட்டம் வாங்கலாம் நிறையப்பேர் அப்படி இங்கை வாங்கியிருக்கினம் என்று சொல்லியிருந்தார்.
அடுத்த நாள் அவர் தனது கல்வித்தகைமை சம்பந்தப்பட்ட பி.ஏ பட்டத்தை தனது முகநூலிலிருந்து எடுத்துவிட்டிருந்தார்.
ஒரு மனிதனுடைய கல்வித்தகமை என்பது அவனுடைய அறிவு சம்பந்தப்பட்டது.கல்வி என்:பது ஒருவனுடைய மானம் சம்பந்தப்பட்டதும்கூட.
ஒருவர் எத்தனையாம் வகுப்புவரை தான் படித்தேன் என்பதைச் சொல்லிக் கொள்வதில் வெட்கப்படத் தேவையில்லை.
நான் பலருடன் பேசும் போது அவர்கள் தாங்கள் படித்த படிப்பைவிட எத்hதனையாம் வகுப்புவரை படித்தோம் என்பதைவிட அதிலும் மேலாக அவர்கள் அறிவாற்றல் நிரம்பியவர்களாக இருப்பதை நான கண்;கூடாகப் பாரத்திருக்கிறேன்.
தமிழரசியல்வாதிகள் சட்டத்தரணிகளாகவும் நொத்தாரிசுகளாகவும் தர்க்க கற்கைநெறியைக் கொண்டவர்களாக பெரும்பாலனோர் இருந்த போதும் அவர்கள் அரசியல் தர்க்க நுட்பம் தெரியாதவர்களாக மேலும் மேலும் சிலந்தி வலைக்குள் அகப்பட்ட பூச்சிகளாக அரசியலில் சிக்கலை ஏற்படுத்திக் கொண்டார்கள்.
பல்லினம் வாழும் நாடுகளில் நவீன அரசியளாளுமை என்பதை அவர்கள் அறியாதவர்களாக உணர்ச்சிவசப்படுத்தல் அரசியலை மட்டுமே தெரிந்தவர்களாக இருந்தார்கள்.
இவர்களில் இன்றைய அரசியல்வாதிகளில் திரு.எம்.ஏ.சுமந்திரன் அவர்களும் திரு.சாணக்கியன் அவர்களுமே நவீன அரசியல் தெரிந்தவர்களாகவும் யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு அரசியல் செய்பவர்களாகவும் இருந்து வருகிறார்கள்.
அரசியலுக்கு, அரசியல் விஞ்ஞானக் கல்வி சமகால நவீன அரசியலுக்கு மிக முக்கியமானது மட்டுமல்ல அரசியலுக்குப் படித்துப் பட்டம் வாங்கிய கல்வித்தகைமை முக்கிய தகுதியாகவும் பார்க்கப்படுகின்றது.
இலங்கையிலும் சரி புலம்பெயர்ந்த இலங்கையர் வாழும் நாடுகளில் பட்டச் சான்றிதழில் ஆங்காங்கே சில குழறுபடிகள் இருக்கவும் செய்கின்றன.
தொடர்ச்சியான தமது கலை இலக்கிய அரசியல் சேவைகளைப் ஆண்டுவாரியாகப் பட்டியலிட்டு அதனை உலகப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி அவர்கள் அதனை ஆய்வு செய்து கலாநிதிப்பட்டம் வழங்கும் முறைமையம் இருந்து வருகின்றது.
ஆனால் இப்பட்டம் அரசியல்துறைக்கோ அன்றி பொறுப்புக்கூறும் துறைசார் பணியில் தற்தெளிவு நோக்கிய அதிகாரிகளுக்கோ கேள்விக்கு விளக்கமாகப் பதில் சொல்லும் தகுதிகாண் துறைகளுக்கு இதனை நெறிமுறைப்படுத்தப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட கல்வித்தகைமையாக ஏற்றுக் கொள்ளவே முடியாது.
அதுமட்டுமல்லாமல் ஆங்காங்கே விருதுவழங்கி கௌரவிப்பதையும் துறைசார் பணிக்கான கல்வித்தகமையாக ஏற்றுக் கொள்ள முடியாது.
இப்பொழுதைய சமகால அரசில் பேசுபொருளான சபாநாயகரின் கல்வித் தகைமை காரணமாக அவர் தனது பதவியை இராஜினாமச் செய்தது அரசியல் நேர்மையாகும்.
இப்பொழுது இலங்கை நாடாளுமன்றத்திலும் சரிஅமைச்சுகளிலும் சரி அங்கம் வகிப்போரின் கல்வித்தகைமை அலசி ஆராயப்பட வேண்டியதே.
இலங்கை தனது கல்வியியலில் மேலோங்கி நின்றது மட்டுமல்லாது ,கண்டிப்பாகவும் இருந்தது.அது தொடர வேண்டும்.கல்வித்தரமே ஒரு நாட்டை வடிவமைக்கப் பயன்பட்டு வருகின்றது.
![]()